பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ❖ லா. ச. ராமாமிர்தம்

நினைவுகள் அல்ல, எண்ணங்கள் ஒருநாளும் அழிவதில்லை.
ஒரு தடவை தோன்றினவுடன், வீணாவதேயில்லை. சதா
ஈதரில் நீந்திக் கொண்டேயிருக்கின்றன. மறுபடியும்
ப்ரஸன்னமாக, இன்னொரு அர்த்தமாக முகூர்த்தத்துக்கு
காத்திருக்கின்றன. மனுஷ ஜன்மத்தின் பெருமையே இது
தான். எண்ணத்தின் மூலம் நாம் பிரும்மாக்கள், சிரஞ்சீவி
கள். நாம் வாழ்க; எனக்கு உடம்பு சிலிர்க்கிறது.”

“உங்களையே வாழ்த்திக்கறேள்.” இருட்டில் அவள்
புன்னகை தெரியவில்லை.

“இருக்கலாம். ஆனால் ஒரு பொதுவான உண்மையை
வெளிப்படுத்துவதன் மூலம் வாழ்க்கைக்கு நன்றி சொல்வ
தாகத்தான் எண்ணம், பார்த்தையா மறுபடியும் வருவது
எண்ணம்தான். எண்ணத்தின் உருவத்தில் நன்றி. அன்று
இரவு அப்படித்தான் அமைஞ்சிருந்தது.

இங்கே நம் வீட்டுக்கெதிரே கொஞ்சம் மைதானமாயிருக்
கறத்தினாலே, வானம் நிறைய இருக்கு. அன்னிக்கு நக்ஷதரம்
ஒரேயடியா பூத்துக் கொட்டிக் கிடந்தது. நிலா இல்லை.
இருட்டோடு சேர்ந்த மர்ம வெளிச்சம். நீ உள்ளே வேலையா
யிருந்தே பசங்க வெளியே போயிருந்தாங்க.”

“அப்பா!”

“Yes?”

“நன்னாயிருக்கப்பா!”

அமைதியில் மனமே முழுத் துல்லியத்தில் ஸ்னானம்
செய்த ஒரு தனி லேசு, ஒரு விடுதலை. முள் வேலியுள்
அவர்கள் வீட்டெதிரே பசும் புல்தரை உண்டு Chlorophyll
இன் குளுமை. தென்றல் அவர்களை ஒத்திற்று. கிழக்கே
பார்த்த வீடு. நாம் கொடுத்து வைத்தவர்கள். காரணமே
தெரியாத, தெரியத் தேவையற்ற ஒரு மன நிறைவு.