பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ❖ லா. ச. ராமாமிர்தம்

ஆனால் அவன் நம் இனத்தில் இல்லை. எனக்குச் சொல்லத்
தெரியல்லே அப்பா!” அவர் கைமேல் தன் கையைப்
பொத்தி, “அப்பா, நாம் 2+4=1” அவள் உள்ளங்கை சுட்டது.
அவள் முகத்தை இருளில் பார்க்க முடியவில்லை. ஆனால்
தகதகத்தாள். நக்ஷத்ர வெளிச்சம்? வானினின்று ஒரு மீன்
சீறி விழுந்தது-ஏதோ சபதம் பிறந்தாற்போல்.

எங்கோ ஏதோ மொக்கவிழ்ந்து சமயம் கமகமத்தது.

அவளுடைய மூர்க்கம் தன்னையும் தொற்றிக் கொண்ட
புல்லரிப்பில், கூடவே அச்சத்தில் தன் சுழலில் இழுத்துக்
கொண்டு போய் விடாதபடி, தன்னைத் தன்னுடன் இருத்திக்
கொண்டார்.

“Beautifull idea. ஆனால் நடப்புக்கு வராதேம்மா!”

“ஏன்?”

“உனக்கே கலியாணம் ஆனால், உன் புருஷனுக்கு இந்த
அவையில் இடம் கிடையாதா?”

“கிடையாது. ஆளைப் பார்த்து, Study பண்ணி அப்புறம்
யோசிக்க வேண்டிய விஷயம். No. இதை யோசிக்க வேண்டி
யதே இல்லை, இந்த equation சொன்னது சொன்னதுதான்
2+4=1, 2+4=1” ஜபித்தாள்.

‘இது நடக்கற காரியமா காத்யாயினி?’ அவர்தான்
முழுப்பெயரிட்டு அழைப்பார்.

‘உன் கலியாணம் நடந்து, நீ புக்ககம் போக மாட்டையா?
பசங்கள் வேலையில் மாற்றலாகி வெளியூர் போகமாட்டார்
களா? அவர்களுக்குப் பெண்டாட்டிமார் உரிய காலத்தில்
வரமாட்டார்களா? குழந்தைகள் பிறக்காதா? எங்களுக்கு
வயசேறிண்டே போகாதா?’

‘இருக்கட்டுமே! சந்தர்ப்பவசங்களால் பிரிந்து போனா