பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அலைகள் ஒய்வதில்லை ❖ 45


லும் ஒன்று என்பது பிளந்து போகணுமா? யார் எங்கிருந்தா
லும் 2+4=1. வேறு எப்படி எனக்குச் சொல்லத் தெரியல்லே.”

“எனக்குப் புரியறதம்மா. 4+2=1. இது ஒரு லக்ஷியம்.
ஒரு அழகிய எண்ணம். இந்த வேளையின் விளைவு. ஆனால்
அதில் நடப்பு இல்லை. நீதியில்லை. உன் பாசத்தின் சுயநலம்
இருக்கிறது. ஆனால் குழந்தை, உன் எண்ணத்துக்கு நீ
எங்கிருந்தாலும் செளக்யமாயிருக்கணும். உன் நல்லெண்ணம்
உன்னைக் காப்பாத்தட்டும்.” அவர் குரல் தழுதழுத்தது.
அவள் தலையை இழுத்துத் தன் கழுத்து வளைவில்
அணைத்துக் கொண்டார்.

இருவரும் அவரவர் யோசனைகளில் ஆழ்ந்திருந்தனர்.
எத்தனை நேரமோ, பின் அவள்,

“ஆமாம் அப்படிச் சொன்ன காத்தியைத்தான் வருஷக்
கணக்கில் பார்க்க முடிவதில்லை. இத்தனைக்கும் கோவை
தான். காண முடியாதவரை சிங்கப்பூரில் இருந்தால் என்ன,
கோவையில் இருந்தால் என்ன?”

“ஏன் உன் தம்பி இங்கே திருவான்மியூரில் தானே
இருக்கான்! அவனைப் பார்க்கப் போறையா?”

“அதெப்படி? அவளவாளுக்கு வீடுன்னு அமைஞ்சப்
பறம் அங்கென்ன எனக்கு அனாவசிய வேலை?”

“இதன் பேர்தான் பெண்டுகள் நியாயம். இதனுள்
நான் புகுந்து புறப்படப் போவதில்லை. இதுக்கு முடிவே
கிடையாது. நம் பேச்சிலே நாம் திசை தப்பி, எங்கோ
போயிட்டோம்.”

“ஆமாம், அலைகளைப் பார்த்துண்டு குருட்டு
யோசனை பண்ணிண்டிருந்தேனா, திடீர்னு பசி நெனைப்
பெடுத்துடுத்து. அதென்ன வரபோதே அப்படிக் கொழுந்து
விட்டுண்டு-!”