பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ❖ லா. ச. ராமாமிர்தம்

மனசை மாத்திக்க எழுந்து நடந்தேன். அலையோரமா
நடந்தேனோ நடந்தேன், இன்னொரு ஒடம் கண்ணுக்குத்
தட்டுப்படற வரைக்கும். ஆனால் நெருங்க நெருங்க ஒடத்தடி
காலியாயில்லை. ஏற்கெனவே ஒரு ஜோடி பிடிக்கண்
டிருந்தது. வெள்ளைத் தோல்கள்! ஹிப்பிகள் என்கிறோமே
அவா போல இருந்தா. ஆண் ஒரு காதுலே மட்டும் வளையம்
போட்டிருந்தான். ரெண்டு பேருமே அழுக்குன்னா அப்படி
ஒரு அழுக்கு அந்த சிக்குப் பிடிச்ச தலை. சரைக்காத தாடி
யும் ஊத்தை ஊறிப் போன மஞ்சள் காவிப் பல்லும்-
இந்த வெய்யில்லே எப்படி அவாளால் குளிக்காமல் இருக்க
முடியறதோ! ரெண்டு பேருமே சின்ன வயசுதான். ஆனால்
முறுக்கு விட்டுப் போன உடம்பு. அவர்கள் உடைகள்
நெருப்பில் போட்டால் கூடப் பத்திக்காது அப்படி ஒரு
அழுக்கு.

அதென்ன அழுக்கையே வழிபாடாய்க் கொண்டு
இப்படி ஒரு வர்க்கமா? அவர்களிடமிருந்து காற்று
வாடையே-பாதி என் அருவருப்பும் கலந்திருக்கலாம்-
அவாளைத் தாண்டுகையில் என்னை விரட்டி அடிச்சது.
மூக்கைப் பிடிச்சுண்டு ஒடினேன். அவா சிரிப்பு என்னைத்
துரத்தித்து. எனக்குக் காலே விட்டுப் போம் போல்
ஆயிடுத்து! இன்னொரு ஒடம் வரும் வரையில-

ஆனால் அங்கேயும் இடம் காலியாயில்லை.
ஒருத்தி முழங்காலைக் கட்டிண்டு உட்கார்ந்திருந்தா. அலையைப்
பார்த்துண்டு. அவளுக்கு எட்ட, ஒடம் தந்த நிழலோரம
உட்கார்ந்தேன். அவள் வயது நாற்பதுகளில் இருக்கலாம்.
குறிப்பா அவள் கூந்தல் அடர்த்தியா, முரடா சாம்பல்
விட்டுண்டு, அது அவிழ்ந்து, தடுமனா முதுகில் சரிஞ்சிருப்,br> பது கூடத் தெரியாமல், அலையைப் பார்த்துண்டு
இருந்தாள்.