பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அலைகள் ஒய்வதில்லை ❖ 47


எனக்கு முதுகு கெஞ்சித்து. ஆனால் இவள் உட்கார்ந்
திருக்க நான் எப்படிப் படுக்கறது? காலை நீட்ட இட
மில்லை.

ரெண்டு பேரும் அலையைப் பார்த்துண்டிருந்தோம்.

மெதுவாக அவள் முகம் என் பக்கம் திரும்பிற்று. விழி
யோரங்களிலிருந்து இரண்டு ஸ்படிகங்கள் புறப்பட்டுக்
கன்னத்தில் வழிஞ்சு மோவாயிலிருந்து உதிர்ந்தது. அருண்டு
போயிட்டேன். ‘திக்’கெனு ஆயிடுத்து.

‘அலைகள் ஒய்வதில்லை’ என்றாள்.

அவளுடைய கண்ணீருடன், அவளுடைய அந்தப்
பொதுவான வாக்கும் சேர்ந்து கொண்டு அவள் திடீர்னு
களையாயிட்டா. “நீங்கள் தான் சொல்லணும். துக்கத்துக்குத்
தெய்வம் உண்டோ?”

“இதென்ன கேள்வி? துக்கத்தைத் தெய்வமாய்க்
கொண்டாடணுமா?”

“அப்படிச் சொல்லல்லேன்னா, அந்தத் துக்கத்தின்
வெறி, காரணம் எல்லாம் நாளடைவில் அடங்கி, ஒரு
படர்ச்சி காலத்துக்கும் மனசில் தங்கிப் போயிடறதே,
அவரைப் பந்தலடியில் நிழல் மாதிரி, வைரத்தில் ஒட்டம்
தெரியறது என்கிறாளே, கானல் நடுங்கற மாதிரி, அப்புறம்
சமுத்திரத்தில், ஏரியிலோ அலை தாண்டின அமைதியில்
ஒரு ஒடம் கவிழ்ந்து மிதந்தால் நெஞ்சில் அடைக்கும் அது
மாதிரி...”

“கோமதி நீயா பேசறே?”

“பின்னே யாராம்? அவள் முகத்தில் களைமாறினதைப்
பார்த்தேன். துக்க தேவதையாத் தோனித்து. தோணினதைச்
சொல்றேன். அப்புறம்தான் குண்டைத் தூக்கிப் போட்டாள்: