பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



4


ஸ்ருதி பேதம்


விழிப்பு தன் சுழிப்பிலிருந்து தானே வெளிவருமுன்
ஏதோ சத்தத்தில் வெடுக்கெனக் கலைந்து முழுமையில்
கூடிக்கொண்டது. பழக்கத்தில் பார்வை சுவர்க் கடியாரத்
தின் மீது பதிந்ததும் அடித்துப் புரண்டு எழுந்தாள். ஐயோ
ரொம்ப நேரமாச்சே! உடனே நினைப்பு வந்தது. இன்றைக்
குப் போலாமா வேண்டாமா? இன்றிலிருந்தே வேண்டாமா?

கதவைத் தட்டும் சப்தம். அதுதான் எழுப்பியிருக்கிறது.
மெதுவாய், படிப்படியாய், உடனே அவசரமா; கூடவே
அதிகாரம்.

இடுப்பில் துணியைச் சரிபண்ணிய வண்ணம் போய்த்
திறந்தால் வாசலில் போலீஸ், ஒருவன்தான்.

“இது யார் பத்மாவதி வீடா? நீங்கதான் பத்மாவதியா?
உள்ளே வரலாமா?”

கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, பதிலுக்குக் காத்திரா
மலே, உள்ளே வந்துவிட்டான்.

இவா வழக்கமே இதுதானே! ஆனால் அவள் கலவர
மடையவில்லை. தொண்டையடியில் சிரிப்பு வந்தது.

“உங்கள் வீட்டுக்காரர் இல்லையா?”

“Campஇலே போயிருக்கார். இன்னி ராத்ரி வரணும்.”