பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 57


ஏன் உங்ககிட்ட சொல்லிக்கிட்டிருக்கேன்? என் விவரங்
களைத் தெரிஞ்சுக்க வந்திருக்கிங்களா, இல்லே நீங்க
விசாரிக்க வந்ததுக்கும் இதுக்கும் ஏதேனும் சம்பந்த
முண்டா?”

“இல்லேம்மா நான் வந்தது-”

“ஒரு நிமிஷம். பல் விளக்கிட்டு வந்துடறேன்-”
சாம்பலில்தான் தேய்த்தாள். ஆனால் அவள் தன்னைப்
பரிதாபத்துக்குரியவளாய்க் காட்டிக் கொள்ளவில்லை.
பற்களும் பளிடாமல் இல்லை. அவனுக்குத்தான் இருப்புக்
கொள்ளவில்லை. அந்த கீக்கிடத்தில் உழல முயன்று
தவித்தான்.

அவள் அடுப்பு மூலைக்குப் போனாள்.

“கொஞ்சம் காப்பி சாப்பிடறிங்களா? இருப்பதில் ஒரு
பங்கு-”

“இல்லேம்மா, டுட்டி மேலே-”

“அப்படியா? ரொம்ப சரி.”

தன் காப்பியை அனுபவித்துக்கொண்டே மூலையின்
இருளிலிருந்து வெளிப்பட்டாள்.

“எது எவ்வளவு மோசமானாலும், என் காப்பியை நான்
தரம் குறைச்சுக்கறதில்லே. உசிர்த்தண்ணியாச்சே! சரி, நீங்க
வந்த சமாச்சாரம்?”

“பக்கத்துத் தெருவிலே காலையிலிருந்து திமிலோகப்
படுதே. உங்களுக்குத் தெரியாதா?”

“எனக்கு எப்படித் தெரியும்? நான்தான் தூங்கிட்
டேனே!”

“நீங்க வேலை செய்யற இடத்துலே அந்தப் பெரியவர்
இறந்துட்டாரம்மா-”