பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 61


“அப்படித் தைரியமாச் சொல்லிக்க முடியாது மாமா!
ஏதோ ஒரு குழம்பு, ரஸம், கறி அத்தோடு சரி. இதில் ஒண்ணு
சரியா வாய்க்கும். நிச்சயமா சாதத்தைக் குழைச்சுடுவேன்.
வெரைட்டி items தெரியாது. டிபன் கழுதை கெட்டால்
குட்டிச்சுவர். ரவா உப்புமாவு, நாலுபேர் விருந்தாளி
வந்துட்டா, சேர்த்து சமைக்க உதறல்தான். இந்த சரக்கை
வெச்சுண்டு உங்களிடம் வேலை கேட்க எந்த தைரியத்தில்
வந்தேன்னு எனக்கே புரியல்லே!”

அவள் கைகொட்டிச் சிரிக்கையில் ஒரு குழந்தைத் தனம்
தெரிந்தது.

முறுவலித்தார். “குழைச்ச சாதம்தான் எனக்கு ஒத்துக்
கும். ரஸம் must. மற்றபடி எனக்கு அவசியமில்லை. டிபன்-”
உதட்டைப் பிதுக்கினார். “டிபன் காரம் ஆசை எல்லாம்
தாண்டிப் போயாச்சு. வயிறு நுட்பமாயிடுத்து. வாரம் ஒரு
வேளையேனும் இட்டிலி இருந்தால் தேவலை. ஒட்டலில்
வாங்கிக்க வேண்டியதுதான்.”

“முயற்சி பண்ணறேன்.”

“யாரம்மா என்னைப் பார்க்க வரப்போறா? யாரும்
வேண்டாம்னுதானே விலகி வந்திருக்கேன். சமையலுக்கு
லாயக்கில்லைன்னு நீயே சொல்லிக்கறாய். ஆனால் இந்தப்
பத்து நாளில் தேடினதில் உன்னை விட்டால் வேறு கதி
யில்லை போலிருக்கு.”

“Sorry மாமா. சமையல் நான் கத்துக்கல்லே. பொது
வாகவே எனக்கு அதில் interest இல்லே. நான் சமையல்காரி
யில்லை. வீட்டுக்கு ஒரே பெண். ஒரே குழந்தை. சின்ன
வயசிலே அம்மா போயிட்டா. முழுக்க முழுக்க அப்பா
செல்லம். பாதி ஆண்பிள்ளையாகவே வளந்துட்டேன்.
வசதியா வாழ்ந்துட்டு இப்போ சறுக்கினதும் அவஸ்தைப்
படறேன். குடும்பம் நடத்தப் போதல்லே.”