பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ❖ லா. ச. ராமாமிர்தம்

தலையை உதறிக் கொண்டு அடுப்பில் பண்டத்
தைக் கிளறினாள். அடிப்பிடிச்சுப் போச்சோ? புதுசாப்
பண்ணனுமோ?

மனுஷன் என்னத்தைச் சாப்பிடறான்? இந்தக் கொறிப்
புக்கு ஒரு சமையல், ஒரு பரிமாறல், குடித்தனம் நடத்துதல்
என்று வேறு! ஒரு நாளைப் பார்த்தாற்போல், பொறிச்ச
குழம்பு, தெளிவு ரஸம், மசியல், எரிச்சலா வரது. அதே
புடலை, செள செள, கீரையை விட்டால் வேறு கதி
யில்லையா? கத்திரிக்காய்கூட மத்திமம்தான். கிழங்கு பக்கம்
தலை வெச்சுப் படுக்காதே. மாற்றிக்கூட சமைக்க முடியாது.
அவர் அனுமதித்து விட்டாலும் தனக்கு ஒரு சமையல்
என்று இரட்டைச் சமையலுக்கு உடம்பு வணங்கவில்லை.
வீட்டுக்குப் போய் அவனுக்கு வேறே பொங்கியாகணும்.

ஒருநாள் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கையில்
கேட்டுவிட்டாள். “மாமா, உங்களுக்கு மனுஷாள் இல்லையா.
பிள்ளைகள், பெண்கள்?”

“ஏன் இல்லாமல்?”

“அப்ப இந்த வயசிலே, இந்த உடம்பிலே என்
சமையலை நம்பிண்டு நீங்கள் ஏன்-”

“ஏன் உனக்கு அலுத்துப் போச்சா?”

“ஐயோ அதுக்கில்லே மாமா! எனக்குப் பிழைப்பைத்
தந்திண்டிருக்கேள். அதை நானாக் கெடுத்துப்பேனா?
உங்களுடைய நலத்துக்குத்தான் கேட்டேன்.”

“இருக்கா அவாளவாள் இடத்துலே செளக்யமா-”
உடனேயே தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் அவசரத்துடன்,
“ஆனால் நான் அவர்களை நம்பியில்லை. என் பென்ஷனே
எனக்கு தலைக்கு மேல வெள்ளம்-”