பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஸ்ருதி பேதம் ❖ 65


“மா-மி?” நாக்கு நுனிக்கு வந்துவிட்ட கேள்வியை
அப்படியே கடித்து விழுங்கினாள். ‘அந்தக் கேள்வி உன்
பேச்சுப் பிரதேசமல்ல.’ உள்ளுர்ணவு எச்சரித்தது.

அவர் முக இறுக்கமும், உள் சுருங்கலும் மேல் பேச்சுக்கு
வழியில்லாமல் தடுத்துவிட்டன.

விழுங்கிய கேள்வி தொண்டையில் சிக்கிக்கொண்டு
அங்கேயே நூல் நூற்றது.

மாமி பிள்ளைகளுடன் கட்சி சேர்ந்து விட்டாளா?
என்ன அக்ரமம்! இந்த வயஸில் மாமியும் மாமாவும்
ஒருவருக்கொருவர் துணையாக சேர்ந்து இருக்க
வேண்டாமா? நான் பேசுவது காதல் இல்லை. கட்டை
சரிஞ்சு போனபின் காதல் ஏது? நான் நினைப்பது
விசுவாசம். ஆனால் என்னை வெச்சுண்டு, மத்தவாளுக்கு
உதாரணம் காட்ட எனக்கென்ன வாயிருக்கு!

இல்லை அவசியமில்லாத கவலையைப் பட்டிண்டிருக்
கேனா? மாமி மாமாவை முந்திண்டுட்டாளா? அவளுக்கு
மாத்திரம் வயசாகியிருக்காதா? மடியில் மஞ்சளும் தேங்காயு
மான்னு ஏதோ வசனம் பேசறாளே அப்படியும் இவர் பாடு
கஷ்டம்தான்.

அம்மா போனப்போ எனக்கு விவரம் தெரிஞ்ச
வயசானாலும் என்னை வளர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப்
பட்டிருப்பார். இப்போ தெரியறது. அவரும் மறு கல்யாணம்
பண்ணிக்கல்லே. வயசு கொஞ்சம் தாண்டிப் போச்சுன்னா
லும் பெண் கொடுக்க வேண்டியபேர் இருந்தாலும், அப்பா
வுக்கு இஷ்டமில்லையோ என்னவோ? என்னதான் I.P.S.
ஆனாலும் அடிப்படையில் போலீஸ்காரன் தானே! போலீஸ்
காரனை யாருக்கு மனசாரப் பிடிக்கறது? அதனாலும்
அப்பா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அப்பா பண்ணினது