பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ❖ லா. ச. ராமாமிர்தம்

தப்போ? இப்போ சந்தேகம் தட்டறது. வீட்டிலேயே
பொம்மனாட்டியின் ஹிதமான வாடை போயிடுத்து.
தனக்கும் கெடுத்துண்டு எனக்கும் நல்லது பண்ணல்லே.
சித்தி ஒருத்தி வந்திருந்தால். எனக்கு ஒரு அத்தாயிருந்
திருப்பாள். நான் பெண் என்று அப்பப்போ எனக்கு
ஞாபகப்படுத்தியிருப்பாள். அதற்குப் பதிலா தறிகெட்டுப்
போயிட்டேன். இப்போ நினைச்சு என்ன பயன்? எது எப்படி
யிருந்தால் என்ன, இவரும் நானும் ஏதோ விதத்தில் ஒரே
ஒடம். துடுப்பில்லாத ஒடம்.

அப்புறம் அதென்ன இருந்த இடத்தை விட்டு அசை
யாமல், ஓயாமல் படிப்போ அல்லது எழுத்தோ? இரண்டை
யும் விட்டால் யோசனை? இப்படியே மனிதன் காலத்தைத்
தள்ள முடியுமோ? ஆனால் அவர் பொழுது அப்படித்தான்
போயிற்று.

ஒரு சமயம் அல்ஸர் காரணம் உடலில் ஈரப்பசை
வற்றிப்போய் (dehydration) ஓரிரவு ஆஸ்பத்திரியில் இருந்து
drips ஏற்றிக் கொண்டு வந்தார். Ulcer என்றால் இந்த
மாதிரிப் பிரச்னைகூட இருக்கா? மனம் பரிதவித்தது.
தனக்கு இந்த அவசர நிலை ஏற்பட்டதை அவர் அவளிடம்
காட்டிக் கொள்ளவில்லை. அவளாகத்தான் விசாரித்துத்
தெரிந்து கொண்டாள். எரிச்சலாக வந்தது. இட்டிலியும்
flaskஇல் காப்பியும் கொண்டு வந்திருக்க மாட்டேனா?
பக்கத்தில் இருந்திருக்க மாட்டேனா? நானாகவே போயிருக்
கலாம். ஏதோ சங்கோஜம் தடுத்தது. ‘ஏன் வந்தாய்?’ என்று
கேட்டுவிட்டால்? தன் சுய கெளரவத்தை இம்மாதிரி
யெல்லாம் காப்பாற்றுபவர்கள் நம்ப முடியாதவர்கள்.
உண்மையில் மனிதத் தன்மையில்லாதவர்கள். அதைவிட
ஏதோ உயர்ந்த நிலையை எட்ட ஆசைப்படுகிறார்கள்.
தனக்கும் பிரயோஜனமில்லை மற்றவர்க்கும் இதமில்லை.