பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 69



உறவுகள். சமயத்துக்கேற்றவாறு இவை
பெயர்கள் எடுக்கும்.

நான் பெற்றுவிட்டதனால் என் பேறுகள்
எனக்குச் சொந்தமன்று. அவரவர் தம் விதி
யைத் தனித்தனி நூற்று அதற்கு வாழ்க்கை
யென்று பெயர் கொடுத்து அதன்படி அழிய
வந்திருக்கிறோம். இந்த உண்மைக்கு கோபம்
கொண்டு பயனில்லை. அந்தக் கோபத்துக்கு
அர்த்தமில்லை. ஏமாந்தால் அது உன்
குற்றமே.
The world belongs to Youth and youth is only
as long as it lasts.

நான் பயனுள்ளவரை வேணும். சக்கை
பிழிந்ததும் எறியப்படாமல், சக்கை உலர்ந்து
உதிர்ந்து போகும்வரை ஸஹித்துக் கொள்
ளப் படுகிறேன். இதைவிடச் சிறையும்
கொடுமையும் ஏது?

வயல்காடில் இருளில் பரப்பின் மேல்
நடந்து செல்கையில், அதோ தூர விளக்கு
வெளிச்சம் ‘மினுக் மினுக்’. இதோ கிட்ட
தான் என எதிர்வருபவனும் தைரியம்
சொல்லிக்கொண்டே போகிறான். ஆனால்
நடக்க நடக்க எட்ட எட்ட வெளிச்சம் சிரிக்
கிறது. நான் இருக்கும் இடமும் தெரியாமல்,
போகும் இடமும் தெரியாமல் இதற்குத்
தான் வந்தேனா ஏ மனோ நீயேனும்
சொல்லேண்டி!

எத்தனை வயதானாலும் மரணம் இப்பவும்
பயமாய்த்தானிருக்கிறது. வயதின் சுமை