பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஸ்ருதி பேதம் ❖ 71


இல்லை, பூர்வ ஜென்மாவின் தொடர்பு
என்பது இலாமல், கற்பூரம், மெழுகுவர்த்தி
எரிவதுபோல, என்னையே நான் தின்று
கொண்டு அத்துடன் அவிந்துவிடு
கிறானோ? Every begining is fresh, A new
life and one by itself unto the last breath?
இந்த logicபடி மனோ நீ இருக்கிறாயா
அல்ல அறவேயில்லையா?

இந்தத் தர்க்க ரீதியில், இதுகாறும் இருக்கும்
கோவில், குளம், அதனதன் ஐதீகம், மஹாத்
மியம் பிராரத்த கர்மா. வினை விதித்தவன்
வினையறுப்பான், an eye for an eye, a tooth
for a tooth. மறுபிறவி. இந்த நம்பிக்கைகள்,
கோட்பாடுகள், I am a vengeful God (Jehova
தன்னைப்பற்றி சொல்லிக் கொள்வது)
இவை; இவை போன்ற மற்ற விஷயங்களின்
உண்மை நிலையென்ன? இதிகாச புராணங்
களை மானுடத்தின் சரித்திரத்தில் சேர்த்து
விட்டாலும்-இல்லை அவையும் உள்ளடக்
கியே-இவையெல்லாம் மனிதன் மனிதனை
ஆள்வதற்கு, தொன்றுதொட்டு வளர்த்த
பயமுறுத்தல் விதிகளா? Man rules man by
fear. அதற்குக் காலங்காலமாய் வளர்ந்து
இன்னும் வளர்ந்து கொண்டேயிருக்கும்
விரிவான கோலம்! ஆண்டவனே நீ
ஒன்றிருந்தால் என்னிடமிருந்தே என்னைக்
காப்பாற்று.

எனக்குத் திகைப்பூட்டுவது யாதெனில்
மனோ இத்தனை நாள் கழித்து இப்போது