பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ❖ லா. ச. ராமாமிர்தம்

எங்கே முளைத்தாய்? சாகும் வேளை
நெருங்குகையில் பழைய நினைவுகள்
பவனி வரும் என்று சொல்வார்கள். அதைச்
சேர்ந்ததா உன் தோற்றம்?

நாம் பார்த்துக்கொண்ட கடுகளவு நேரமும்
ஒரு தடவை-ஒரே தடவை; முதலும் கடைசி
யும் அதுவே. ஊரிலிருந்து ரயிலில் வந்து
இறங்கி பெண் வீட்டாரால் எற்பாடாகி
யிருந்த vanஇல் விடிகாலையின் பொன்
வெய்யிலில் நாங்கள் என் கலியாணத்துக்கு
மண்டபத்தை நோக்கி விரைந்து கொண்
டிருக்கையில்-அன்றிரவு ஜான வாஸம்-நீ
உன் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்
டிருந்தவள்-பெரிய கோலம் அதன் நடுவில்
நீ-தற்செயலாக நிமிர்கையில் நம் கண்கள்
சந்தித்தன. உடனேயே கார் தெருமுனை
திரும்பிவிட்டது.

நாம் பார்த்துக் கொண்டு, நம் விழிகள்
கேள்வியில் பேசிக்கொண்டன. அத்தோடு
சரி. அப்புறம் நான் இன்னமும் உன்னைப்
பார்க்கப் போகிறேன்.

நான் கலியான மாப்பிள்ளை என்று
உனக்குத் தெரிந்திருக்கும். நான் உன்னைக்
கலியாணத்தில் பார்க்கா விட்டாலும் நீ
உள்ளூர்தானே!

பிறகு உன்னை நினைக்க நேரமில்லை. ப்ர
மேயமுமில்லை. எனக்குத்தான் பாரு காத்
திருக்கிறாளே. அவளைக் கரம் பிடிக்கத்