பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ❖ லா. ச. ராமாமிர்தம்

மை காட், வ்யாஸ் என்னடா?” வந்தவனை அப்படியே
இறுகக் கட்டிக் கொண்டான்.

“வஸூ, வ்யாஸைத் தெரியல்லியா? ஒ, இல்லை,
உனக்குத் தெரிய நியாயமில்லை. நமக்குக் கலியாணமாகும்
முன்னரே இவனும் நானும் பிரிஞ்சுட்டோமே! வா, வா
வ்யாஸ், என்ன இப்படி ஆயிட்டே?”

கையைப் பற்றி இழுக்கையில், வ்யாஸ் அவன் மேல்
கனமாய்ச் சாய்ந்தான்.

“அடேடே! என்ன ஆச்சு?”

“சாப்பிட்டு மூணு நாள் வந்தவனின் பேச்சு மூச்சாய்
ஒடுங்கிப் போனது.

“மை காட்!” ஸ்வேதா, நண்பனைத் தாங்கிக் கொண்டு
போய் ஸோபாவில் கிடத்தினான்.

“வஹூ! ஏதேனும் ட்ரிங்க் கொண்டு வா!”

“லைமா? நல்லது. லேசாய் உப்புப் போடு. அதான்
தென்பு தரும். வ்யாஸ் குடி-மெல்ல மெல்ல. மெதுவா-
ஸிப், பரவாயில்லே.”

வ்யாஸின் கண்களில் ஒளி ஊறுவது தெரிந்தது.
எழுந்திருக்க முயன்றான்.

“அவசரமேயில்லை. படுத்துக்கோ. வஸூ, மோருஞ்
சாதம், ரெண்டு தம்ளர் கணக்கில் மையாக் கரைச்சு, திப்ப
யைப் பிழிஞ்சு எரிஞ்சுட்டுக் கொண்டு வாயேன். பட்டினி
கிடந்த உடம்புக்குக் கரைச்ச மோருஞ்சாதத்துக்கு மிஞ்சின
ஒளஷதமில்லை, அமிர்தமுமில்லை.”

அதைக் குடித்த சற்று நேரத்துக்கெல்லாம் விருந்தாளி
யின் விழிகள் செருகின. அவனுடைய அயர்ந்த தூக்கத்தை
இருவரும் பார்த்துக் கொண்டு நின்றனர்.