பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ❖ லா. ச. ராமாமிர்தம்

கொருவர் தெரியாதென்று ஒருவரையொருவர் ஏமாற்றித்
கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் நெடுநாளைய
பழக்கம்.

அவளுடைய முழங்கை வளைவில் நெற்றிப் பொட்டு
கொதித்தது. தூக்கம் போல் ஏமாற்றும் கண் எரிச்சலின்
மயக்கத்தில் இரண்டு பிஞ்சுக் கைகள் கழுத்தைக் கட்டிக்
கொண்டு காதோரம் “ஆன்ட்டி!” என்று கேட்டது. “பாப்பூ!”
எதிர்க்குரல் வாய்விட்டே வந்து விட்டது. இது நினைப்பின்
ஏமாற்று-உடனேயே தெரிந்துவிட்டது. பாலைவனத்தில்
தவிப்பவனுக்கு நீரோடையும் சோலையும் கானல் தெரியு
மாமே!

எதிர் வீட்டார் குடித்தனம் பெயர்ந்த ஒரு வாரமாய்
இது மாதிரி பிரமை சற்று அடிக்கடி நேர்ந்து கொண்டிருக்
கிறது. கவனம் மாற, பதில் குடித்தனம் இன்னும் வரவில்லை.
கவனம் மாறுமோ?

வந்து நான்கு மாதங்கள்தான் இருந்தார்கள். கணவன்,
மனைவி இருவருமே உத்யோகம். அவளுக்கு வங்கியில்.
சொந்த வீடு கட்டியாறது, வங்கிக் கடனில், “வீடு தயா
ரானதும் போயிடுவோம்.” தயாராகி விட்டது. போய்
விட்டார்கள், பழுக்கக் காய்ச்சிய குழந்தை நினைவை அவள்
நெஞ்சில் உழுதுவிட்டு. ஒரொரு சமயம் இந்த புதுத்தனிமை
பைத்தியமே பிடிச்சுடும் போலிருக்கு.

“வீட்டுக்கு வாங்கோ மாமி!” விலாசம் கொடுத்து,
கிருஹப்ரவேசத்துக்கு அழைத்து விட்டுத்தான் போனார்கள்.
ஆனால் அவள் போகல்லே. பயம், பாப்பூவின் நினைப்புக்கு
இப்பவே தப்பிக்க வழியில்லை. போனால் அப்புறம் அடிமை
தான். பாப்பூ போதைக்கு, இப்பவே நெஞ்சில் உதிரம்
கொட்றது. போய் வளர்த்துக் கொண்டால் ஆறாத புண்,
புரை கண்டுவிடும். அவளுக்கு மறக்க முடியவில்லை.