பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பாப்பூ ❖ 89


போயிருந்தாலே தேவலை. ஒடிப் போனவளானால்
என்றுமே ஆறாத புண்தான். அதுவும் சமீபமாயிருந்தால்
பச்சைப்புண்தான்.

ஆனால் ஜோதி யார்? காதலியா? கூட வாழ்ந்தவளா?
இந்த உறவுப் பாகுபாடுகள், அவற்றின் நெஞ்சுறுத்தல்கள்,
ஸ்வேதாவுக்குத் தெரிந்தவரை அவன் நண்பனுக்குக்
கிடையாது. அவன் தனிக்காட்டு ராஜா. பெற்றோர்,
பெரியோர், உற்றோர், சுற்றம் என்று அவனுக்கு அந்த
நாளிலேயே கிடையாது. ஏகப்பட்ட சொத்துக்காரன். ஆனால்
எது எப்படியிருந்தாலும், தன் உறவுகளில் நாணயமா
யிருப்பான் என்று ஸ்வேதாவின் அசைக்க முடியாத
நம்பிக்கை. ஸ்வேதாவுக்கு சங்கீதத்தில் இருந்த லயிப்பே
அந்தக் கலை, ஞானத்துடன் சேர்ந்த ஆன்மீகமே, சுயக்கட்டுப்
பாட்டையும் தற்காப்பையும் தந்தன என்று ஸ்வேதாவுக்கு
நிச்சயம்.

“வ்யாஸ், நான் இந்த சமயத்தில், ‘ஸாரி’ சொல்வதைப்
போல அபத்தம் வேறில்லை. நாம் ஒருவரையொருவர்
பார்த்துப் பதினஞ்சு வருடங்களுக்கு மேல் ஆறது. கடிதத்
தொடர்பும் இல்லை. விவரங்களைச் சொல்லி நீதான்
எங்களைக் காலக்ரமத்துக்குக் கொண்டு வரணும். ஆனால்
அதற்கு அவசரமேயில்லை. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.
எனக்கு நேரமாறது, கிளம்பறேன். ராத்ரி நேரமாத்தான்
வருவேன். எனக்காகக் காத்திருக்காதே. வஸூ உன்னை
கவனித்துக் கொள்வாள்.”

அவனைத் தோளைத் தட்டிவிட்டு வஸூவுக்குத் தலை
யசைத்துவிட்டு ஸ்வேதா கிளம்பிவிட்டான். அவன் போன
பின்னர், இருவரும் ஒரு நேரம் மெளனமாயிருந்தனர். அவன்
பெருமூச்சுடன் எழுந்தான்.