பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இடம்மாறிய வேர்கள்...பாசம் என்றால் இவர்களுக்குக் கொள்ளை விருப்பம்... ஆனால் அது, இவர்களை வழுக்காமல் பார்த்துக்கொள்வதில் வல்லுநர்கள்.

அரண்மனை போன்ற அந்த வீடு அவருடைய உழைப் பில் உருவானது என்றாலும் அவருக்கென்று ஒதுக்கப் பட்ட இடம் ஒர் அறைதான்! அதிலும் ஒரு நிறைவுண்டு...

பதவி, பட்டம், பணம் மேலிடத்துச் செல்வாக்கு ஆகிய இவற்றை வங்கியில் மாற்றாத வரைவோலையாகத் தான் கொண்டிருப்பாரேயன்றித் தனிம உதவிக்காகத் தகையாளர்களிடம் கூடச் செல்வதில்லை.

நேரம் காட்டி, எதற்கும் அஞ்சாதே அஞ்சாதே என்பதுபட அஞ்சுமுறை ஒலித்தது. தன்புற முகம், ஏனையோருக்கு நகைமுகமாகிவிடக் கூடாதேயென்று கீரைகடைந்த மத்துப் போன்ற தன் தலையைச் சமன் செய்து சீர் தூக்கினார். நடத்துநருக்குத் தன்னால் மனச் சோர்வு வருதல் கூடாதென்று உரிய சில்லறையை உட்பை யில் போட்டுக் கொண்டு, இரண்டு கைப் பைகளுடன், காய்கறி வாங்கத்தான் புறப்பட்டார்.

ஐந்து நிறுத்தத் தொலைவுள்ள இடத்தினைப் பேருந்து நகர்ந்து நகர்ந்து இருபத்தைந்து மணித்துளி களில் அடைந்கத. நடந்திருந்தால் கால்களுக்குப் பயிற்சியாயிருந்திருக்கும். காரணம் பேருந்தல்ல... நகரை வலமாக வருபவர்கள். விரைவாகச் செல்ல முடியாத ஊர்திகள், தன்னைக் கடந்து உந்து செல்லக் கூடாது என்ற தனிமச் சிந்தனை கொண்டவர்களையெல்லாம் தாண்டியல்லவா ஒட்டுநர் செல்ல வேண்டியுள்ளது. கண்களுக்கு நேராகத் தெரியும் குறளை விட்டுவிட்டு உந்து செல்லும் வேகத்திலும் அதன் இருகரைகளிலும் ஒட்டப்