பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அலை தந்த ஆறுதல்

பட்ட சுவரொட்டிகள், ஆதரவற்ற அனாதைகட்கு ஆடையாகச் செல்லும் வாய்ப்பில்லாத ஆலைத் துணிகள் தாங்கிய செய்தித்தோரணங்கள் இவையே பயணம் செய்வோர் பலரின் பார்வையில் பட்டன. கண்ணுக் கணிகலமாகக் கண்ணாடியணிந்த சிலர், மனத்துக் கணிகலமாக எதையாவது கொள்ள வேண்டாமா?

புற்றிசல் போல் நிற்கும் பயணிகள் இருந்தாலும், இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் புண் சொற் கனைகளை அள்ளி வீசாமல் இறங்கினர். இறங்கும் பொழுதே, வரவேற்புல சாப்பாட்டுக்கு ஏழரையாகுமே! என்னமோ குறள் பேச்சுன்னு போட்டிருக்கே... அதைக் கொஞ்சம் கேட்டுத்தான் வைப்போமே...நேரமும் போனாப்பல இருக்கும்.போன்ற முல்லுரைகள் அவர் உள்ளத்தில் தொடுகோடுபோல் தொட்டுச் சென்றனவே தவிர தைக்கவில்லை.

பேச்சரங்கத்திற்கு நடைபாதை நளினங்களை யெல்லாம் நயமாகச் சுவைத்த வண்ணம், படிகள் ஏறி மேலே சென்றார். அவ்வரங்கத்தின் நெற்றிப்பொட்டாய்த் திகழ்ந்த மணிகாட்டி ஐந்து ஐம்பதைக் காட்டியது. கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், “வாங்க, பேச்சுத் துணைக்கு ஒராள் வந்தீங்க...ஆறாகப் போவது ...பேச்சாளரையுங்காணும் ... அமைப்பாளர்களையுங் காணும் என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் வாசலில் “இனிய இசையொலிக்கும் உந்து வண்டி நின்றது ..."சே! சே! மணி ஆறாவப் போவுது...ஒராசாமியக்கூடக் காணோம்...என்று சொல்லிக் கொண்டு மிடுக்கான மனிதர் ஒருவர் வந்தார்..."ஏன்யா காப்பாளரே! பேச்சாளர் வந்தாச்சுதா? ஆளைவேற முன்ன பின்னெ பாத்தது இல்லே... என்னமோ தொலைபேசியில் பேசறப்ப