பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

11

மட்டும் ஏதோ தான்தான் முன்னாடி வர்ர ஆளுமாதிரிப் பேசுனாரே! பேச்சோட சரி...” என்று முடித்தார்... காப்பாளர், ஐயா...நானும் சோடா வாங்கியாரப் போயிட்டேன்...ஆறாகப் போவுது யாரும் பேச்சாளர் வண்டில் வந்தாப்ல தெரியலியே!” என்றார்.

உடனே, கடிதோச்சி மெல்ல எறிவதைப் போல ஒரு பொருளுள்ள பார்வையை வீசிவிட்டு “அடியேன் கலை முதல்வன், பேச்சாளன்” என்ற சொற்களைக் கூறிய அளவில் அந்த மிடுக்கர், தன் முகத்தைச் சரிசெய்து கொள்ள ஏழை பட்ட பாட்டைப் பெற்றார். அருந்த பருக ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். “நன்றி"யென்று மட்டும் சொல்லிவிட்டு “நான் இங்கே வந்தது பேச மட்டுமே! முன்னமேயே வந்தவர்களையும் அழைப்பிதழில் அச்சிட்ட நேரத்தையும் மதிக்க வேண்டுவது நம் கடமை! எனவே நிகழ்ச்சியைத் தொடங்குங்கள்!” என்றார் கலை.

வரவேற்புரையென்ற பெயரில், பள்ளி மாஂணவன் தேர்வுப் பொதுக் கட்டுரையில் தோன்றியதையெல்லாம் எழுதுவதைப் போல் அந்த மிடுக்கு மனிதரும், “குறள் பேச்சென்றால் எந்தக் குறளைப் பற்றிப் பேசப் போகிறார்...நான் பெரிய பெரிய மனிதர்களிடம் எல்லாம் இந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் குறளைக் கேட்டிருக்கிறேன் என்று தன் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போனார். அரங்கமும் களைகட்டத் தொடங்கியது...இரண்டு வகையான பேச்சுக்களைக் கலை முதல்வனால் காண முடிந்தது. ஒன்று: வரவேற்பாளர் ஒலி வாங்கியின் முன்பாகப் பேசியது. மற்றொன்று, அரங்கிலுள்ளோர் தங்களுக்குள் பேசிக் கொண்டது. திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் செல்லும் நேரம் எடுத்துக் கொண்ட வரவேற்பாளர் ஒரு