சி.பா.
13
செயலால்-அல்ல; ஆனால் சொல்லிச் சென்ற செய்தியால் பெரியவர்கள் அவர்கள்.
“பிச்சையெடுப்பவனை விட, அந்த நிலைக்கு வர முடியாமல் போலிப் பெருமைக்காகப் “பிச்சை போடுகிறார்களே அவர்கள்தான் இழிந்தவர்” என்று சொல்வி ஒருவர் இறந்து பட்டார்! அவருடைய அந்தக் குறுகிய பேச்சு: குறட்பேச்சு சமுதாயத்தைப் பற்றிய ஒரு சரியான திறனாய்வு இல்லையா?
“தெருவிலே வீடில்லாததால் திரிகின்ற எங்களைப் பரத்தையென்றால், வீட்டிற்குள்ளேயே வளைய வருகின்ற சில மனமாறிகள் மட்டும் வேறு போர்வைகளைப் போர்த்துவதால் கற்பாளிகளா என்று தங்களுக்காகவே வழக்குரைத்த விலை நலப் பெண்டிரின் வாதத்தைச் சிந்திக்கவேண்டும். தற்கொலை செய்துகொண்டு கடிதம் எழுதிய ஒவ்வொருவரின் எழுத்தும் வடிவம் இல்லாக் கவிதை. முன்னேற முடியாதவனின் முணுமுணுப்புகள் : ஒழுங்காக வாழத்தெரியாமல் காட்டாற்று வெள்ளம்போல் விரைந்து தன்னையும் அழித்துக்கொண்டு சமுதாயத் திற்கும் சுமையாக இருந்தவர்களின் துன்ப நினைவுகள். நமக்குத் தேவை...ஏளனம் செய்ய அல்ல...தடம் புரளாமல் வாழ! ஆயிரத்து முன்னுாற்று முப்பது குறளில் ஒன்றுகூடத் தெரியாமல் இருப்பது பிழையில்லை... இவருடைய வாழ்க்கையைப் பார்.குறளுக்கு விளக்கமாக இருக்கிறார்...என்று குறளோடு ஒப்பிட்டுப் பேசப்படும் பேச்சுத்தான் குறள் பேச்சு...ஒன்று கூறுவேன். ஏமாற்றப் பட்டவனைவிட ஏமாற்றியவன் தான் பெருந்துன்பத் திற்குள்ளாகிறான். அது பணிக்கட்டியில் மறைந்த வெப்பத்தைப்போல. எனவே தன்னலத்தின் அடிப்படை யிலாவது பிறரை நாம் வஞ்சிப்பதோ பிழைப்பதோ