பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அலை தந்த ஆறுதல்

தவறு... இதுவே குறள் பேச்சு’ என்று பேசி முடித்ததற்கும் வாசலில் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது.

வேறு எகனையும் பொருட்படுத்தாமல் படிகளில் இறங்கிப் பேருந்து நிலையத்திற்குச் சென்றார். அங்கே அவர் மனைவி மிகுந்த புன்முறுவலுடன் மகிழுந்தை வைத்துக்கொண்டு காத்திருந்தார். ‘மழைக்காக ஒதுங்கி வண்டியில் இருந்தவாறே உங்கள் பேச்சைக் கேட்டேன்... ஆழமான உணர்வுகள். இன்னொரு செய்தி! உங்களுக்கு வரவேற்புரை சொன்னாரே அவர்தான் நம் சம்மந்தி ஆகப் போகிறார். அது அவருக்கு தெரியாது... அவர் மனைவியும் நானும் இப்போதுதான் பேசி முடித்தோம்...நாங்கள் பேசியதும் குறள் பேச்சுத் தானே?” என்று வினவினாள்.

துன்பக் கடலில் மூழ்கி. வாழ்க்கைப் புயலில் சிக்கி, சூழல் வலையில் அகப்பட்டதால் உணர்வுகளைச் சுருக்கிய கலை முதல்வன், மனைவியின் வலம்புரி வாசகங்கேட்டு மகிழவும் இல்லை; மாற்றுரைக்கவும் இல்லை எனக்குப் பேருந்துப் பயணம்தான் பழக்கப்பட்டது. பல்வேறு கதைக் கருத்துக்களை உள்ளடக்கி இடைவெளியில்லா நாடகத்தை மனித நடிப்பால் வெளிக்கொணரும் இயங்கு சக்தியின் ஆற்றலை நான் ஒரு கருவியாக இருந்து மற்றவர் களுக்குச் சொல்ல வேண்டுமானால், என் போக்கிலேயே என்னை விட்டுவிடு’ என்று கூறினார் கலை முதல்வன்

மறுநாள் காலையில் தொடர்ந்து பார்வையாளர்கள் “கேட்க முடியாமற் போயிற்றே!’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். உடல் காட்ட முடியாமல் குரல்வழித் தங்களைத் தொலைபேசிமூலம் அறிமுகம் செய்துகொண்ட அறிவர்களும் பிறமொழிச் சொற்களில் காங்கள் வர இயலாமற் போனதற்காக வருந்தினர்.