இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி.பா.
15
இந்தக் குறள் பேச்சு என் தனிப்பட்ட ஒருவனின் பேச்சல்ல; வாழ்க்கையில் மிகுதியாக எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து சோர்ந்து போன மனநலக் குறை யாளர்களின் அரங்கேறாத பேச்சுத்தான் அது’ என்று இவர் பேசியதைப் பத்திரிகையில் படித்துவிட்டு பாராட்டுத் தெரிவிக்க வந்ததையும் பொருட் படுத்தாமல், ஊருக்கு அப்பால் தனியாகக் குடிசை யொன்றில் ஊனமுற்ற தன் தம்பிக்காகத் தள்ளாத வயதிலும் அவனுக்காக வாழ்கிறாரே தந்தையார்: அவரைக் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். “கணம் மகிழ்ச்சியைத் தந்து விடாது; மனம்தான் அதைத் தர வேண்டும்’ என்ற உண்மைப் பொருளை உபதேசித்த உத்தமரைக் காணப் புறப்பட்டார்.
குறட்பேச்சு ஒரு வெற்றுச் சொற்களால் ஆன காகித மாலையல்ல; மனிதனின் பட்டறிவைக் கோர்வையாக்கிய தஞ்சாவூர்க் கதம்பம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே விளங்கும்.