பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நன்னனும் நங்கையும்

சங்ககாலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில் இப்பொழுது வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கம் என்ற ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நன்னன் என்பதாகும். இந்த நன்னன் ஆண்ட காலத்தில் ஒர் இரங்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது.

நன்னன் என்ற அந்த மன்னனுக்குச் சொந்தமான ஒர் அரண்மனைத் தோட்டம் இருந்தது அந்தத் தோட்டம் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆற்றின் கரையிலே அழகாக அமைந்திருந்தது. அந்தத் தோட்டத்தில் வகை வகையான மரங்கள் மாமரங்கள், பலா மரங்கள், வாழைமரங்கள், கொய்யாமரங்கள் முதலிய கனிதரும் மரங்கள் அந்தத் தோட்டத்தில் நிறைந்திருந்தன! வானை முட்டி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், கமுகு மரங்களும் கண்ணிற்கு நல்ல காட்சி வழங்கின. அந்தத் தோட்டம் பச்சைப் பசேலென்று பசுமையாகத் தெரிந்தது. ஆற்றங்கரையில் அமைந்திருந்ததால் நல்ல வளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. அத்தந்த மரங்கள் கனி கொடுக்கும்பொழுதும் மரங்களில் நல்ல காய்ப்புக் கண்டு கொத்துக் கொத்தாகப் பழங்கள் பழுத்துத் தொங்கின. பலாப்பழங்கள் .வேரிலும், அடிமரத்திலும், கிளைகளிலும் பழுத்து நிறைந்து அந்தக் தோட்டத்திற்கே நல்ல மணத்தைத் தந்துகொண் டிருந்தன! வாழைக்குலைகள் நிலம் நோக்கிக் கிடந்தன.