பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

17


கொய்யா மரங்களில் அணில்கள் பழங்களைக் கொத்தித் தின்று இங்கு மங்கும் ஒடிக்கொண்டிருந்தன. ஆக அந்தத் தோட்டத்தைக் காண்பதற்குக் கண் கோடி வேண்டும். ஆனால் அந்தத் தோட்டத்தினுள் யாரும் செல்ல முடியாது. தோட்டத்தைச் சுற்றிலும் நன்றாக வேலி போடப்பட்டு காவற்காரர்கள் பகலும் இரவும் காத்து வந்தார்கள். அரசன் நன்னன் எப்பொழுதாவது வருவான். வந்து தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வான். அரசாங்க அலுவல்களிலிருந்து விடுதலை பெற்ற உணர்வு தோன்றும், அவனுக்கு அந்தத் தோட்டத்திற்கு வந்து விட்டால் எனவே அவன் அந்தத் தோட்டத்தைப் பெரிதும் விரும்பிவந்தான். அதிலும் மாமரங்கள் அவனுடைய காவல் மரங்கள்! அவற்றின்மேல் அவன் தன் உயிரையே வைத்திருந்தான் !

அந்த ஊர்ப்பெண்கள் நாள்தோறும் ஆற்றங் கரைக்குப் போவார்கள், இடுப்பில் குடம் ஏந்திக்கொண்டு அழகு நடை போட்டுக்கொண்டு போவார்கள்! நேரம் போவதுகூடத் தெரியாமல் நீச்சலடித்து விளையாடுவார் கள். அவர்களின் செந்தாமரைக் கண்கள் நன்கு சிவக்கும் வரையிலும் குளிப்பார்கள். ஆசைதீரக் குளிக்கவேண்டும் என்று நினைத்து மகிழ்ச்சியோடு குளிக்க வருவார்கள். ஆனால் குளித்து முடித்து வீட்டிற்குத் தண்ணிர்க் குடத்தை இடுப்பில் வைத்துத் திரும்பும்பொழுது அவர்கள் ஆசை தீர்ந்திருக்காது. நாளைக்கு எப்பொழுது வருவோம் வந்து மகிழ்ச்சியுடன் நீராடுவோம் என்பதிலேயே இருக்கும்!

ஒரு நாள்!

- நல்ல இளவேனிற் காலம்! பங்குனி மாதத்திலே இலையையுதிர்த்துவிட்ட மரங்கள் எல்லாம் மீண்டும்