உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அலை தந்த ஆறுதல்

மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. தவழ்ந்து வந்த காற்றில் மலர்களின் மணம் மிதந்து வந்தது. ஆற்றில் சலசலவென நீர் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது.

ஆற்றைநோக்கி எழிலி மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தாள். அவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கும். நல்ல களை பொருத்திய முகம்; ஆழ்ந்து அகன்ற கரிய நீலக் கண்கள், குமிழ் மூக்கு, கரும் பாம்பென நீண்ட சடை, அவள் செல்வக்குடியில் பிறந்தவள். அவள் பெற்றோர்களுக்கு அவள் ஒரே பெண்தான்! தவங்கிடந்து பிறந்த ஒரே ஒரு செல்வ மகள் அவள்! இன்று வீட்டை விட்டுப் புறப்படவே நாழிகையாகி விட்டது அவளுக்கு. எனவே அவள் தோழிகள் இதற்கு முன்னரே ஆற்றங் கரைக்குப் போய்விட்டிருப்பார்கள். எனவே அவள் பரபரப்போடு நடந்தாள் ஆற்றங்கரையை நெருங்க நெருங்க அவள் வேகம் மிகுதிப்பட்டது! அவளைத் தூரத்தே கண்டுவிட்டதும் ஆற்றில் மகிழ்ச்சியோடு குளித்துக்கொண்டிருந்த அவள் தோழிகள் ஆரவாரத் தோடு வரவேற்றார்கள். அந்தத் தோழியர் கூட்டத்தின் தலைமை எழிலுக்குத்தான் எழிலி இல்லாவிட்டால் அந்தத் தோழியர் கூட்டத்தில் நிறைவு ஏற்படாது. எனவே எழிலியை அவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்ததில் ஒன்றும் வியப்பில்லை!

எழிலி ஆற்றில் அவர்களோடு அமிழ்ந்து அமிழ்ந்து குதித்தாள். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் கரை எங்கும் எதிரொலித்தது!

நேரம் ஒடிக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு எழலாம் என்று எழுந்தாள் எழிலி. அப்பொழுது