பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

19

ஆற்றங்கரை ஓரத்திலிருந்த அரசன் நன்னனுக்குச் சொந்தமானத் தோப்பிலிருந்து ஒரு மாங்காய் அவளுக் கருகில் 'தொப்'பென்று விழுந்தது. மாங்காய் என்றால் எழிலுக்குக் கொள்ளை ஆசை எனவே எதையும் யோசி யாமல் உடனே கடித்துத் தின்னத் தொடங்கிவிட்டாள்.

“அடியே, எழிலி! என்ன வேலை செய்தாய்’ என்று அவள் தோழிகள் கத்தியதுகூட அவள் செவியில் விழவில்லை. ஆனால் வலுவான முரட்டுக்கரம் ஒன்று அவள் கையைப் பற்றியபொழுதுதான் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அரசனின் தோட்டத்துக் காவற்காரர்கள் பலர் கரையில் நிற்பதையும் அவர்களில் யமகிங்கரனான ஒருவன் தன்கையைப்பற்றியிருப்பதையும் கண்டாள். இதுவரை மகிழ்ச்சியோடு அவளோடு ஆற்றில் குளித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த தோழிகள் எல்லாம் பயத்தால் வெடவெட வென்று நடுங்கி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களையெல்லாம் அதட்டி மிரட்டிவிட்டுக் காவலல்காரன் எழிலியைப் பற்றி அரசன் நன்னனிடம் அழைத்துச் சென்று விட்டான். இதுவரை பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த தோழிகள் ஊர்நோக்கி ஒடினார்கள், எழிலியின் பெற்றோர்களிடம் இந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு!

மறுநாள் அவை கூடியது. அரசனோ கொடுஞ்சீற்றத் துடன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அமைச்சர், சேனைத்தலைவர், நகரமாந்தர் முதலியோர் அவரவர்களுக் குரிய இடங்களில் அமர்ந்திருந்தனர். எழிலியின் பெற்றோர்கள் அடக்க வொடுக்கமாக ஒரு பக்கமாக, என் ன நிகழுமோ என்ற அச் சத்தில் நடுங்கி நின்றனர். எ மிலியின் மேல் கு ற்ற ம் சாட்டப்பட்டது. அரசன் உய ருக்கும் மேலாக மதித்துவரும் காவ ல்மரமான மாமரத்