உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அலை தந்த ஆறுதல்

தின் காயினைத்தின்றுவிட்ட குற்றம் எழிலியினுடையது. குற்றத்திற்குத் தூக்குத்தண்டனை வழங்கினான் கொடுங் கோலனான நன்னன்.

தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுதனர் பெற்றோர். அவையே வியப்பில் ஆழ்ந்தது, அடுத்த நிமிடம் எழிலிக் காக இரங்கத் தொடங்கியது.அதைத்தவிர வேறு என்ன செய்துவிட முடியும் அவர்களால் நன்னன் கொடுங்

கோன்மைதான் நாடு அறிந்ததாயிற்றே!

ஒர் எளிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று கேட்பதற்கு அவையில் கூடியிருந்த எவருக்கும் துணிவில்லை, திராணியில்லை!

எழிலியின் பெற்றோர் எண்பத்தோரு யானைகளைத் தண்ட த்திற்குரிய பொருள்களாகக் கொடுக்கமுன் வந்தார்கள். எழிலியை எப்படியாவது உயிர்த்தண்டனை யிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடித்தார்கள். ஆனால் அரசன் மறுத்துவிட்டான்.

அடுத்து எழிலியின் எடைக்கு எடை பொன்பாவை செய்து தருவதாகச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் இவ்வாறு குற்றஞ்செய்தவர்கள் எடைக்கு பொன்னைத் தண்டமாகத் தந்தால் அவர்களை விடுதலை செய்துவிடுவார்கள்.

இதனையும் அரசன் நன்னன் மறுத்துவிட்டான் அவன்தான் என்றோ இரக்கத்தைத்துறந்த அரக்கனாகி விட்டானே!

எனவே யாராலும் எழிலியைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது. கொடுங் கோன்மையின் கோரக் கரங்கள் அவள் உயிரைப் பறித்துக்கொண்டன!