பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

21


இந்தக் கொடுஞ்செயலைக்கேள்வியற்றனர் சோழர் தன். அவர்கள் நீதிக்குப் பெயர் போனவர்கள். எனவே, அடாது இழிசெயல் செய்த நன்னன் நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று, அந்த மாமரங்களை வெட்டி வீழ்த்தி அவனையும் இறுதியில் அழித்தனர்.

இந்த நிகழச்சியினைப் பரணர் என்ற பழம்பெரும் புலவர் குறுந்தொகை என்ற சங்கத் தமிழ் நூலில் பாட்டாகப் பாடியுள்ளார்!

இதிலிருந்து பிஞ்சு நெஞ்சை அஞ்சாது கொன்ற நன்னன் இறுதியில் அழிந்து பட்டான் என்பது தெரிய வருகிறதல்லவா? அன்பும் அருளும் தாம் என்றும் வாழும்!

“மகிழ்நன் மார்பே வெய்யை யானி அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்றுமொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே’

-குறுந்தொகை : 73

அலை-2

அலை-2