பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

23

என்னைத் தன் முழங்கை ஆயுதத்தால் ஒரு தள்ளுத் தள்ளி விட்டு நாலைந்து பேரைச் செருப்புக்காலால் மிதித்து இட்டு, ஒர இடம் ஒன்று பார்த்து அமர்ந்து கொண்டார். விதி என்னை அவர் பக்கத்திலேயே அமரச் செய்தது. வரதட்சினை, தீண்டாமை, வேலையில்லாத்திண்டாட்டம், மதமாற்றம் எல்லாவற்றையும் குளத்தில் அழுக்குத் துணி அலசுவது போல் அலசினார். அவர் அடுத்த ஸ்டாப்பில்’ இறங்க வேண்டுமேயென்றுகடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்மீது கடவுளுக்குக் கூடக் கோபம்! என் பிரிஃப்கேஸ் ஒரு சின்ன “மெடிக்கல் ஷாப்” ஆனதால் கண்ணிமை நொடியில் ஒரு மாத்திரையை விழுங்கினேன். நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களைவிட அதனை விழுங்குவது எளிமையாகத்தான் இருந்தது.

என்னை விட்டு என்றுமே பிரியாத என் கவலைகளாகிய நண்பர்களின் துணையால் நான் இறங்கும் இடத்தில் பத்திரமாக இறங்கினேன். மாடு ஒன்று அரசியல் போஸ்டர் ஒன்றைச் சுவைத்துக் கொண்டிருந்தது. அதற்குக் கூட சினிமாவை விட அரசியலே அதிகம் பிடித்திருக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட அரசியலை அக்குவேறு, ஆணி வேறாகப் பிய்ப்பதன் காரணத்தை அப்போதுதான் அறிந்து கொண்டேன். அறிவியல் மேதை ஆர்க்கமிடீஸ் மனநிலையில் இருந்த போது காய்கறிகளை வாங்கிவிட்டேன். வீட்டில் சிறுத் தொண்டர் பட்டபாடு பட்டேன்.

ஒவ்வொரு டவுன்பஸ் பிரயாணத்திற்குப் பிறகும் மனிதன் மறுபிறவி எடுக்கிறான் என்றார் புதுக்கவிதைப் புலவர். 'பேருந்துப் பயணமானார்' வீட்டில் உள்ளவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது? தக்காளி என்ன விலை? ஏன் இவ்வளவு? பழம்பாதி, காய்பாதி வாங்கக்