பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

25

நடைபாதை நளினங்கள், சோகங்கள், தவிப்புகள், தாண்டவங்கள் எல்லாவற்றையும் தரிசித்துக் கொண்டே சென்றேன். புகழ்பெறாத ருசோக்கள், பாரதிகள், டிக்கன்ஸ்கள் உலவினார்கள். எத்தனையோ கோரக்காட்சிகளைக் கண்டபிறகும் கூட நான் புத்தனாகவில்லை. ஏன்? அவர் உள்ளம் தெளிந்த நீரோடை. என் உள்ளம் ஒரு பாதாள சாக்கடையாயிற்றே!

நடைமெலிந்து உலகின் இரண்டாவது கடற்கரையாகிய மெரினாவுக்கு வந்து சேர்ந்தேன். பொங்கிவரும் பெருநிலவு, கடலில் குளித்துக் குளித்து எழுந்து கொண்டிருந்தது. அது எழுவதைத்தான் அலைகள் கைகொட்டி ஆரவாரித்தன.

அலையின் நேர்முகப் பேட்டிக்குத் தவங்கிடந்தேன். கயமையின் வேடங்கள், மனித விலங்குகளின் பேயாட்டங்கள், காசு கொடுத்துப் பார்க்க வேண்டாத ஏப்படத் திரைக்காட்சிகள் எல்லாம் இருபத்தோரா வது நூற்றாண்டின் வருகைக்கு வரவேற்பிதழ் வாசித்தளிப்பது போல் இருந்தன, கடற்கரையிலே! நேரம் சென்றது.

நானும் கடலும் மட்டும் இருப்பதாக நினைத்து அலைகள் என்னிடத்து வந்தன. ஒரு சில மனிதர்களின் நிழலைக் கண்டதும் விருட்டென்று விலகின. காவல்துறை அலுவலர்கள் தங்கள் கடமையைச் செய்ய வந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அதற்குள் மெரீனா என்னிடம் "இந்த மனிதர்கள் என்னைத் திறந்த வெளித் திருமண மண்டபமாகப் பயன்