உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

27

நுரையுடன் கீதே விழுந்த மீண்டும் கடலுக்குள் சென்றது. புரிந்தது “தேவர்களைத் தண்டிக்கத்தான். அமுதம்! மனிதனுக்கு ஆறுதலையும் அமைதியும் கொடுக்கத்தான் மரணம்! நம்மையறிந்து நாம் எப்படி நாம் பிறப்பதில்லையோ, அப்படியே நம்மையறிந்து மாளக்கூடாது! என்பதைத்தான் அது எனக்கு உணர்த்துவதாகப்பட்டது.

நூல்களும், அனுபவமும் ஆராய்ச்சியும் உணர்த்தாத உண்மையை அந்த அலை எனக்குப் புரியவைத்து விட்டது. சிக்கல்களைக் கண்டு ஒடுபவன் கோழை. கவலையும் நோயும் நெருக்கடியும்தான் அவனை ஒரு வீரனாக்கும். அதனால்தான் 'மெஸ்மர்' சாதிக்காததை ‘சிக்மண்ட்ஃபிராய்டு' சாதித்தார்.

கடைசியாக ஒரலை என்னருகே வந்து ஏதோ சொல்வதுபோல் தோன்றியது. “மனிதனே! உங்கள் நிலத்தில் இருக்கும் பெரிய மலையின் உயரத்தைவிட எங்கள் பணிவின் ஆழம் அதிகம் அந்த மலைதான் பொடியாகிக் கரையில் மண்ணாக உன் போன்ற மனிதர்கள் பலரால் மிதிக்கப்படுவதைப் பார்க்கிறாயே! உன்மனத்தின் ஆழம் கடல் ஆழத்தைவிட மிகுதி. அதில் நேய வலையை வளர்ப்பாயாக! போ! மனிதப் பிறவி அன்புக்குரியது. சேர்ந்து வாழக் கற்றுக்கொடு: குடும்பம் அவனுக்குத்தான் உண்டு!” என்று கூறுவதுபோல் தோன்றியது.

பொழுது விடியத் தொடங்கியது. மனத்தில் இருந்த இருளும் சிறிது சிறிதாக அகன்றது. ஓஸோனின் பின்னணியில் அறிவுக் கடலாம் பல்கலைக் கழகத்தைப் பார்த்து அயர்ந்து போனேன். தன் மூளையின் விரைவால் தன்னையே அழித்துக்கொள்ளும் மனிதனின் நடமாட்டம் தொடங்கியது. அந்த மனிதக்கடலில் நானும் ஒரு