பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அலை தந்த ஆறுதல்

திவலைதானே! விருட்டென்று எழுந்தேன். வீடு செல்லும் பேருந்தில் அமர்ந்தேன். வீடு வந்தது. வாழ்க்கை ஒரு மாறுதலைத் தந்தது.

கூடத்தில் மாட்டப்பட்டிருக்கும் பேராசிரியரின் படம் “அலை தந்த ஆறுதல் எப்படி? மனிதனைக் கேட்டிருந்தால் மாளவே செய்திருப்பான். அலை தந்த வாழ்வுதான் உன் வாழ்வு!” என்று கூறுவதுபோல் தோன்றியது எனக்கு. எனவேதான் நெய்தற் பாடல்கள் என்னை நெகிழச் செய்கின்றன.

மீண்டும் தொலைபேசி! பார்வையாளர்கள்! ஹிஹறிக்கள். ஆனால் மனம் தளரவில்லை. இப்போதெல்லாம் மனத்தில் அசாதாரணமான உறுதி தென்படுகிறது.