உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

31

தடுத்தாள். எல்லோரையும் அமைதிப்படுத்திவிட்டுப் பேனொள். “தோழர்களே! தோழியர்களே! நிர்வாக மேலாளர் அறை ஏர்கண்டிஷன் செய்யப்படவில்லை; பல லட்சக்கணக்கான மதிப்புள்ள எந்திரங்களின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட அறையில் நான் இருக்கிறேன். ஐந்தாறு டெலிபோனின் நோக்கம் வியாபாரமும் பொதுத் தொடர்பும்தான்; நிர்மலா வேறு: நிர்வாக மேலாளர் வேறு! இதைப் புரிந்துகொள்ளுங்கள். இங்குக் குரலெழுப்பிய எல்லோருடைய .பெயரும் பதிவேட்டில் இருக்கிறது. எல்லோருக்கும் பணிப் பாதுகாப்பு உத்தரவு போட்டாயிற்று; ஒவர்டைம்” போனஸ் எல்லாம் தயார்! நான் வந்தவுடன் மேற்கொண்ட முதல் பணியாயிற்றே அது! உங்களில் ஒருத்தி நான்! “ என்று அர்த்தத்துடன் பேசினாள். கண்களில் நீர் துளித்தன. உடனே “எங்கம்மா நிர்மலா என்றென்றும் வாழம்மா!’ என்று கூறிக் கொண்டே தொழிலாளிகள் கலைந்தனர். “ஒரு பெரிய கலவரத்தைச் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டீர்கள்” என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டுப் போய்விட்டார் இன்ஸ்பெக்டர் இன்பவல்லி!

வீட்டிற்குள் நுழைந்ததும் தன் அறையில் உள்ள பாரதியாரின் படத்தின் கீழே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கினாள். “குழந்தாய் எழுந்திரு! என் கனவு நனவாயிற்று! நீ ஆற்ற வேண்டிய கடமை பல இருக்கிறது!” என்று பாரதி கூறியதுபோல் தோன்றிற்று. கண்ணிர் முத்துக்களைக் காந்தள் விரல்களால் துடைத்துக் கொண்டு காலை டிபன் சாப்பிட்டுவிட்டு காலை 9.15 மணிக்கு அலுவலகம் சென்றாள். உலக நடப்புக் காட்சியினை அகக்கண் புறக்கண் இரண்டையும் திறந்துகொண்டு பல வகை உணர்வுகளுக்கும் தன்னைப் பாத்திரமாக்கிக்