பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

33

படுகிறார். அவருக்கு அவ்வேலை வேறு கம்பெனியில் கிடைக்கும் ஒராண்டுவரை முழுச் சம்பளமும் அளிக்கப்படுகிறது’ என்று எழுதிவிட்டு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் நிர்வாகத்தில் இன்றியமையாதவர் இல்லை’ என்று பொறி தட்டியதைப் போல் கூறி அனுபவம் மிக்க அசிஸ்டெண்ட்’ அறிவுடை நம்பியை வேலைக்கமர்த்தினாள்.

தாங்கள் அதிகாரம் செய்வதற்கும் ஆணையிடுவதற்குமே உரியவர்கள் என்றும், தங்கள் வேலைகளையே மற்றவர்களை விட்டுச் செய்யச் சொல்லும் ஒட்டுண்ணி அலுவலர்கள் தவறு செப்தால் தண்டனை கொடுக்கத் தயங்கியதில்லை; நிர்வாகத்தின் தலைவி எல்லோருக்கும் நல்லவளாக இருக்க முடியாது; இருக்கக்கூடாது என்பதை நடைமுறையில் கடைப்பிடித்தாள் நிர்மலா.

கூடியவரையில் தன் அறையில் தானே தனித்திருப்பாள் அவள். ஒருசில வார்த்தைகள்தான் பேசுவாள். டிஸ்கவுன், டிஸ்கவுன் என்று சொல்விப் பல அலுவலர்களை அழைத்து அரட்டையடிக்க மாட்டாள். நின்று கொண்டே பேசுபவர்கள். சும்மா பார்க்கவந்தேன் என்பவர்கள், அடிக்கடி அலுத்துக் கொள்பவர்களையெல்லாம் விரட்டியடித்து விடுவாள்.

இருபதாம் நூற்றாண்டின் விசுவாமித்திரன் ஒருவனின் உடற்பசிக்கு இரையான நாட்டியப் பெண்மணியின் மகளான நிர்மலா ஆணினத்தைப் பழி வாங்க மட்டும் நினைக்கவில்லை. சோடியமும் குளோரினும் சேரும்போது உண்டாகும் சோடியம் குளோரைடுக்கு சோடியத்தின் குணமும் கிடையாது; குளோரினின் குனமும் கிடையாது. அதுபோல இரண்டு உயிர்களின் சங்கமத்தில் மூன்றாவது உயிர் தோன்றும்போது அதற்கு