பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

39

கிழித்துக் குப்பையாக்கிக் காற்றுத் துாதன் கொண்டு தொட்டியில் எறிகின்றதே அதை நினைத்தால் நெஞ்சம் நிறைவாகும். சட்டத்தின் சந்த பொந்துகளையும் மனிதனின் தனிமக்குறைபாடுகளையும் அறிந்து தங்கள் கருத்தை முற்றுவிக்கும் இருள் மனிதர்களுக்கு, சவுக்கடி கொடுக்கும் இயற்கைச் சட்ட ஒழுங்குக் காவலன் இந்த மழைதான்!

“தாத்தா மழை!” யென்றாள் பெண் வயிற்றுப் பேர்த்தி!’ சாளரத்தில் சாரலைக்காணோமே” யென்று நினைத்தேன். எங்கம்மா எங்கெ மழை?” என்று கணிவோடு கேட்டேன்!” “இங்க தாத்தா! இந்த சிலேட்டுல!" என்று சொல்லிக்கொண்டு அந்த நான்கு வயதுக் குழந்தை கையிலுள்ள சிலேட்டைப் பிடித்துக் கொண்டு தத்தித் தளிர் நடையிட்டு வந்தது. அப்போது வானொலியில் “ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி"யென்ற பாடலைக் குயிலின் குரல் ஒத்த பெண்மணி பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டேன்! குழந்தைக்குக்கூட மழை ஒவியமாக எவ்வளவு எளிதாக வந்து விடுகிறது? வியந்தேன்...

இசை மழை, அன்பு மழை, கவிமழை ஆகிய அனைத்திலும் ஒரே நேரத்தில் திளைத்ததால் கற்பனை’ உணர்வுச் சிறகுகள் கொண்டு நெடுநேரம் கவிதை வானில் பறந்துவிட்டு இலக்கிய உலகிலிருந்து இட்லி உலகத்திற்கு வந்தேன்.