பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. விளம்பரம் வேண்டா வீராசாமி

அன்று வெள்ளிக்கிழமை! விஜிடபிள் பிரியாணிக்காக வெங்காயத்தை வேகமாக கட்’ பண்ணிக் கொண்டிருந்தார் வீராசாமி! கத்திமுனையில் காய்கறிகளைப் “பவர்கட்டாயிருந்தாலும் பட்பட் என்று வெட்டித்தள்ளி விடுவார் அவர். அவர் உடம்பிலிருந்து வரும் வியர்வையை மட்டும் விஞ்ஞான முறைப்படிக் காய்ச்சினால் ஒரு தனி மனிதனின் முகம், கை கால்களைக் கழுவப் போதுமானது! ஏன் உள்ள அழுக்கும் போகும்.

ஒரு தம்பி, கட்டுக்கடா, கட்டுக்கடா, கட்டுக் கடகடா துறையில் பேட்ஸ்மெனாக இருக்கிறான். அதிகமாக ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் ‘சிக்சர்” ‘செஞ்சுரி"யென்ற கணக்கெல்லாம் கிடையாது. “அவுட்’ ஆகாமல் மட்டும் பார்த்துக் கொள்வான்! அதில் கெட்டிக்காரன்.

இன்னொரு தம்பி, கட்பீஸ்"களைக் காட்சிப் பொருளாக்கிக் கண்ணைக் கவரும்வண்ண பொம்மைகளின் மானம் காக்கும் மாவீரனாகப் பணியாற்றி வருகிறான்.

மூன்றாமவன் ஒரு கட்சித் தொண்டன்! எந்தக் கட்சிக்காரர் கூப்பிடுகிறாரோ, யார் கைமேல் காசு கொடுக்கிறாரோ காரிலும் ஆட்டோவிலும் காபி-டிபன், மரியாதையோடு அழைத்துச் செல்கிறாரோ அவருக்குச் சேவை செய்யும சிந்தனையாளன். பள்ளிக்கூடம் போகா விட்டாலும் எதிரிலுள்ளவர்களை அர்ச்சுனன் என