பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பா.

41

நினைத்துத் தத்துவங்களையும் வசனங்களையும் கோடை மழைபோலக் கொட்டும் கண்ணன் அவன்.

இவர்களை ஒன்றாகச் சேர்த்து போட்டோ பிடித்தும் பேட்டி கண்டு எட்டுக் காலம் போட வேண்டிய பொறுப்பு என்னுடையது! அதிலும் முக்கிய பதவி வகிக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவரை நேருக்கு நேர் சந்தித்து, கேள்விக்கணைகளைத் தொடுப்பதை விட்டு விட்டு இதைச் செய்ய வேண்டும் என்ற சுக்ரீவ ஆக்ஞை மேலிடத்திலிருந்து...அப்பம் தின்னவோ அலால் குழி என்னவோ!

பத்திரிகையாளன் ஒருவன் வந்திருக்கிறேன் என்பதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாயிருந்தார் வீராசாமி! என்னைப்பற்றி ஒரு டி. சி. போடாவிட்டால் ஒரு பிட்டாவது போடுங்கள்...அதையும் முதல் அல்லது கடைசிப் பக்கத்தில் போடுங்கள்: முடிந்தால் ஞாயிற்றுக் கிழமை போடுங்கள்...என்று சிங்கப்பல்லையும் தங்கப்பல்லையும் காட்டும் ஊர்ப் பிரமுகர்களில் சிலர் எப்படி நாணிக் கோனுகிறார்கள் எங்களிடம். ஹேண்ட் அவுட்’களையும்... பிக்ஸர்சை"யும் அவர்களாகவே கொண்டுவந்து கொடுத்துவிட்டு நாங்களாகப் போட்டது போல் பாவனை பண்ணுவார்கள்... அவர்கள் எங்கே? இவர் எங்கே? எனக்குள் சிரித்துக் கொண்டேன்! போதவில்லையென்றுகூட நினைத்தேன்... அவருக்கா எனக்கா புரியவில்லை.

வெளியே இருந்தவாறே ஸ்டோர் ரூமை ஒருமுறை நோட்டம் விட்டேன். பறங்கிக்காய்ப் பாறைகள்... வாழைக்காய் வெளவால்கள்.பொடிபோடும் மூக்குகளை நினைவுபடுத்தும் குடமிளகாய்கள்...கல்யான வீட்டில் கால்கடுக்க நின்ற களைப்புத் தீரக் கிடந்த நிலையில்