பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

51


15 வயது . ரொம்ப கரெக்டுங்க...

25 வயது : குதிக்காதே! நானே அவருகிட்ட சொல்

றேன்...கம்முனு கெட!

15 வயது . வளவளன்னு பேசாம அவர் கைல கொடுங்க..

25 வயது : (சற்று அடக்கமும் வெட்கமும் கலந்து) : இங்க

பாருங்கப்யா...இதுலே எ ழு தி இருக்கறது தப்புங்களா?...

பேரா : (எழுதியதைக் கையில் வாங்கிப் புன்முறு வல் பூக்கிறார்) : நீங்க நெனச்சு எழுதினது பனம்பழந் தான்...ஆனாக்க பனம்பழம்னு எழுதினாக்க : அர்த்தம் வேறயாப் போயிரும்... காசச் சாப் புட்டதா அர்த்தம்...சொல்லிப் பாருங்களேன் பழக்கத்ல சரியா வந்துப்புடும்...

25 வயது சொல்லுங்கய்யா! தெரிஞ்சுக்கறோம்.

பேரா : பனம்பழம்......

25 வயது : பனம்பழம்.....

பேரா : நீங்க சொல்லுங்க தம்பி...

15 வயது : பனம்பழம்...

பேரா : பாத்தீங்களா; சொல்றப்போ ரெண்டு பேருமே சரியாச் சொல்றீங்க எழுதறப்ப வித்தியாசம் வருது ...நம்ப தமிழ்ல ‘ன இருக்குது, ‘ந’ இருக்குது. இதுங்களையெல்லாம் சொல்லிச் சொல்லி எழுதி பழக்கப்படுத்திக்கிட்டா செரமமே இருக்காது...

25 வயது : எப்பிடீங்க!...எப்பிடீங்க...!