பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

55


25 வயது . ஆனி ஒரு மாசம். ஆணி செவுத்ல அடிகிறது. மனம்'னா மனசுன்னு சொல்வாங்க...பனின்னாக்க கைகாலை நடுக்குமே அது தெரியுமே! அடுத்தது தெரியாது...பனைன்னா நொங்கு வெட்டுவோமே அந்த மரந்தானே..பணைக்கு தெரியாது.

பேரா தம்பி! நீங்க சொல்லுங்க... ஐயா சொல்லாதது

ஒங்களுக்குத் தெரியுமா?

15 வயது மணம்னா வாசனைங்க!...

பனைன்ன தெரியாதுங்க...

பேரா பணைன்னா மூங்கில்னு அர்த்தம்... இருவரும் : இப்ப தெரிஞ்சு போச்சு!

பேரா தெரிஞ்சு இருக்கணும்!...போயிரக்கூடாது... இந்த மாதிரி சின்னச் சின்ன வார்த்தைங்களா எடுத்து ரெண்டு சுழி போட்டா என்ன அர்த்தம்... மூணு சுழி போட்டா என்ன அர்த்தம்னு அத்துபடி செய்துக்கணும்...இப்ப நீங்களே இந்த மாதிரி வார்த்தைங்க சொல்லுங்க1

15 வயது : நான் சொல்லட்டுங்களா?

பேரா சொல்லுங்களேன்!

15 வயது . அண்ணி, அன்னி கானம், கானம்.

பேரா : அண்ணின்னு சொன்னாக்க அண்ணன்

சம்சாரம்’...அன்னின்னு சொன்னா?

15 வயது . ரொம்ப காலத்துக்கு முன்னாடி தமிழ்நாட்ல

இருந்த ராஜாவாம்!