பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

59


ஆச்சி ஊம் கண்ணு கெட்டப்றம் சூரியனை கும்பிட்டு

என்ன பிரயோசனம்? -

செவப் கண்ணுகெட்டிச்சுன்னு ஆரு சொன்னா ஒனக்கு?

ஆச்சி நீ ஒண்ணு! என்னமோ பாடம் எளுதலேன்னு சொல்லி வாத்தியாரு முதுகுபட்டைய எடுத்துப் புடுவேன்னு சின்னபுள்ளையா இருக்கறப்போ சொன்னாரு...அன்னைக்கு புடிச்ச ஒட்டந்தான்... பள்ளிக்கூடத்து பக்கமே தலைவைக்விெயே!

செவப் சரியான பயந் தாங்கொள்ளி...பெத் தவங்களுக்கு ஒத்தவங்க படிச்சவங்க...கோளி முதிச்சு குஞ்சு மொடம் ஆயிடுமா? வாத்தியாரு அடிச்சாக்க நீ செத்துருவியோ! கொடுத்து வைக்கினுமே!

ஆச்சி : இன்னமே நானு படிச்சு, தேறி, எங்க உத்தி யோவத்துக்கு போவப் போறேன். ஏதோ வயவாக் காட்டுக்குப் போயி பயிரு பச்சைய பாத்துகிட்டு காலத்தை தள்ளிப் புடலாமுன்னு பாக்குறேன்... அத்தோட சிலேட்டையும் புத் தவத்தையும் சின்ன புள்ளை மாதிரி எடுத்துகிட்டு போயிட்டா பாக்குற நாலு பயலுவ என்னிய பாத்தா சிரிக்கமாட்டான் ’

செவப் : இப்ப ஒன்னிய தலைல வச்சிகிட்டா கூத்தாடு றாங்க?...இந்த பாரு...படிப்புக்கு மட்டும் வயசு கெடையாது. சாவுற வரைக்கும் படிக்கலாம்... வாத்தியாரு சொன்னாரு. நீ வேணுமுன்னா ஒரு நாளைக்கி வா...பாத்துகிட்டே இரு இஸ்டம்னா படி... இல்லாங்காட்டி வுடு...

ஆச்சி நம்மை போட்டு வதைக்காதே! இன்னைக்கு ஆடு புவி வெளையாட வாரத சொல்லிப் புட்டேன்...இன்னொரு நாளு வர்ரேம் புள்ளே.