இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சி.பா.
77
________________
சி.வா. 77
தேடணும்... அவுங்க நேரம் பாத்து...போவணும்... கடிதாசியப் படிக்கிற அளவுக்கு வெரசா சொல்லிக் குடுத்துப்புட்டீங்க தம்பி...ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு.
பன்: இப்ப
தெரிஞ்சுகிட்டீங்களா? படிப்புக்கு வயசு கெடை யாதுன்னு! படிப்பு இருந்தா மத்ததுங் கள்ளாம் தானே வரும். கத்துக்கிடணும்னு ஆசை இருந்தாப் போதும்.. கத்துக்கிடலாம்...
முத் : என்னங்க பன்னாரி! நானே மொதல்ல மெரண் டேன்.. நம்பளையும் இந்தச் சின்னப் பசங்களை வெரட்றா மாதிரி வெரட்டி 'அ' னா, ‘ஆ’வன்னா லேருந்துதான் தொடங்குவீங்கன்னு நெனச்சேன். இந்தப் பொடியங்கிட்ட போய் படிக்கறதான்னு வெக்கப்படக்கூடச் செய்தேன்...நீங்க எங்க மனசு நோகாம எவ்வளவு விஷயங்களை சொல்லிக் குடுக்குறீங்க...
இந்த மாதிரியெல்லாஞ் சொல்லி எனக்கு மண்ட கனம் வர் ராப்ல செய்யாதீங்க...எங்களுக்கு குடுத்த பயிற்சியிலே இன்னும் பத்துல ஒரு பங்குகூட நாஞ் சொல்லலியே! எப்பிடியோ முதியோர் கல்வியோட நோக்கத்தை புரிஞ்சுகிட்டீங்க! மகிழ்ச்சி! செங் : மெய்யாச் சொல்றேங்க...மண்வளப் பரிசோ தனையப்பத்தி நீங்க வௌக்கமாச் சொன்னப்பரந்தான் புரிஞ்சுது...
பன் : ஒங்களுக்கெல்லாம் ஜப்பானிய சாகுபடி மொறை தெரியுமில்லியா...