சி.பா.
87
பின் :
பின் :
பெண் :
அகராதியில் ஒரு பக்கத்தில், ஒரிடத்தில் நிம்மதி யாக, நித்திரை செய்கிறது. மனித வாழ்வில் எத்தனையோ ஆயிரம் பேர் மத்தியில் எங்கோ ஒருவரிடம்தான் அது விழித்துக்கொண்டிருக்கிறது.
("எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி?”
டி.எம். செளந்தரராஜன் பாடிய பாடல்-இசைத் தட்டு-ஓரிரண்டு அடிகள்-பின்னணியில். பின்னர் பாட்டு தேய்கிறது)
கோடானுகோடி செல்வம் படைத்தவன் வாழ்வில் நிம்மதி இருப்பதாக நினைப்பது கனவு குவியலோ குவியல் என்று புகழைக் குவித்தவன் வாழ்வில் அது இருக்கிறது என்பது வெறும் பேச்சு பட்டமும் பதவியும் ஒருங்கே பெற்றவன் வாழ்வில் நிம்மதி குடிகொண்டிருக்கிறது என்பது கானல். ஆனால் நல்ல மனைவினயப் பெற்ற எவன் வாழ்விலும் நிம்மதி நிரந்தர கீதம் பாடிக்கொண்டிருக்கிறது. (நல்ல மனைவி-நல்ல குடும்பம் பாட்டு)-(இசைத் தட்டு)
“மனைக்கு விளக்கம் மடவார்” என்பதைப் பழம் பாட்டு ஒன்றும் கூறுகின்றது.
‘மலைாத்தக்க மாண்புடையவள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’
ஆகா இதைவிட ஒரு படி மேலே நின்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.