பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

அலை தந்த ஆறுதல்


பிறகு ரத்தம் சிந்தறது தப்புன்னு பேசற கதை தான்!

கு.2 : இதுலே என்னடா, மானஸ்தன் வந்து வாழுது!

பொல்லாத மானஸ்தன்.

(இசை)

இரும் தண்ணிர், தண்ணிர் நாவு வறண்டுவிட்டது!

தண்ணிர் கொடுங்கள்.

கு.1 : பார்த்தாயடா மானஸ்தன் தண்ணிர் கேட்கறார்! கு3 இந்தாங்க அரைக்குவளைத் தண்ணீர்!

இரும் வேண்டாம்; சோழநாட்டுச் சிறையில் காவிரி நீர் குடிப்பதைவிட, இந்தச் சேரன் மானத்தோடு மாள்வதே நலம். எடுத்துச் செல்லுங்கள்.

கு.2 : மானத்தைப் பார்த்தியாடா! அடம் பிடிக்குது.

(சிறு சலசலப்பு)

கு.1 : காவிரிச் செல்வர்-கழுமலப்போரில் கணைக்கால் இரும்பொறையை வெற்றிகண்ட காவலர்-எழுபது கோயில்களை எடுத்த ஏந்தல் சோழ மாமன்னர் செங்கணான் வருகிறார், பராக்! பராக்!

(இசை)

பின் : சோழன் செங்கணான், சிறையில் அடைபட்ட கனைக்கால் இரும்பொறையைக் காணுகின்றான். மானத்தோடு உயிர்நீத்த நிலையை ஓர் ஒலையில் எழுதி வைத்துவிட்டு மாண்ட நிலை தண்ணிருக்கு உரியது மட்டுமல்ல; அது கண்ணிருக்கும் உரியது