94
அலை தந்த ஆறுதல்
கு.4 :
கு.5 :
(தமுக்கு ஓசை)
என்னப்பா இது... அமீனா புகுந்துவிட்டான்.
என்னிக்கோ ஆமை புகுந்துவிட்டது. இன்னிக்கு அமீனா புகுந்துவிட்டான்.
ஆமை புகுந்துவிட்டதாவது?
வரவுக்கு மீறிய செலவு செய்யற பண்புதான் ஆமைக்குச் சமானம்னு சொன்னேன்.
ஒகோ.: ஆமாம். ஏதோ ஆயிரம் ரூபாய் சம்பாதனை-அப்பா சேர்த்து வைத்த சொத்து சுகம்இருக்குன்னு தலைகால்தெரியாமல் ஆடினான். இப்போ அமீனா மிஞ்சின ஒரு வீட்டையும் ஏலத் துக்குக் கொண்டுவந்துட்டான்! துரை காய்கறி பதார்த்தம் வாங்கி வரப்பக்கூட டாக்ஸிதான்!
பிறத்தியார் மெச்சிக்க வாழற எவனுடைய கதை யும் அமீனா கிளைமாக்ஸ்லேதான் (Լքւգ-այւն . வரவுக்கு ஏத்த செலவு இருக்கணும்; விரலுக்கேத்த வீக்கம் இருக்கணும்.
(இசை)
பெண்.4 டீ. பங்கஜம்! பார்த்தியோ, அந்த அலமு
பண்ண ஆர்ப்பாட்டத்துக்குக் கைமேல பலன்!
பெண்-5 வேண்டியதுதான்! தெருவிலே ஒரு புடவைக்
-
காரன் போகக்கூடாது. தவணைமுறை என்று சொல்லிட்டா போதும். ரகத்துக்கு ஒரு சேலை தான் நிறத்துக்கு ஒரு ஜாக்கெட்டுதான்.
பெண்.4 : சொந்த நகை போய் கவரிங்காச்சு. இப்போது
அதுவும் போயாச்சு. சம்பாதிக்கிறது காப்பணம்;