பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

அலை தந்த ஆறுதல்


அடைய நல்ல மனைவி, மான உணர்ச்சி, சிக்கன அறிவு முதலியன துணைபுரிகின்றன. இதைத்தான் திருவள்ளுவர்,

பெண் . ‘மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை'’

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகா அகலாக் கடை”

என மூன்று குறள்களில் அழகாகக் குறிப்பிட்டு ஓவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார்.

இல்வாழ்வானுக்கு இன்ப வாழ்வு வேண்டும்.

இன்ப வாழ்வு உண்மையான வாழ்வாதல் வேண்டும்; போலி வாழ்வாகக் கூடாது. அதற்கென வையத்துள் வாழ்வாங்கு வாழ வள்ளுவர்

பெருமான் வகுத்துச் சென்ற நெறிகளே இவைகள்.