பக்கம்:அழகர் கோயில்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் இடையரும் 93 லுள்ள பெருமாள் கோயிலில் இறைவனுக்கு 'ஆ மருவியப்பன்' என்றே பெயர் வழங்குகிறது. ஆய்குல மன்னன் கோ கருதந்தடக்கனின் பார்த்திவ சேகரபுரச் செப்பேட்டின் மூலம், அம்மன்னன் ஒரு ஸ்ரீ கோயில் எடுத்து விஷ்ணு பட்டாரகரை ப்ரதிஷ்டை செய்து பார்த்திவ சேகரபுரம் என்று பேர் இட்ட செய்தியை அறிகிறோம். இச்செப்பேட்டின் காலம் சற்றேறக் குறைய கி.பி.856 ஆகலாமென நடன. காசிநாதலும் கு.தாமோ தரனும் கருதுகின்றனர்.12 திருவரங்கம் கோயிலில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஓதுவதற்கு, கோட்டூர் வீரசோழ முனையதரையனான ஆயர் கொழுந்து சக்ரபாணி என்பவன் 50 கழஞ்சு பொன் கொடுத்ததைக் கி.பி. 1085 இல் எழுந்த ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. 13 தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டொன்றில் "இடையன் முத்தழி திருமாலிருஞ்சோலை' என்ற பெயர் காணப்படுவதால், திருமாலிருஞ்சோலை இறை வனையும் இச்சாதியினர் தொன்றுதொட்டு வழிபட்டுவந்த செய்தியை அறியலாம். 5.2.5. ஆண்டாரின் சமயத்தாரில் இடையர்கள்: அழகர்கோயிலில் ஆண்டார்க்குரிய சமயத்தார்களில் சாம்பக் குளம் நல்லான் தாதன் சமயம். கட்டனூர்ச் சயம், மேலமடைச் சமயம், பிள்ளையார்பாளையம் சமயம் ஆகியோர் சாதியில் இடை யராவர். சாம்பக்குளம் பரமக்குடிக்குத் தெற்கே ஐந்து கல் தொலை விலும், கட்டனூர் திருப்பாச்சேத்திக்குத் தெற்கே ஏழுகல் தொலை விலும் உள்ளன. மேலமடையும் பிள்ளையர்பாளையமும் முறையே மதுரைக்குக் கிழக்கில் ஒரு கல் தொலைவிலும், தெற்கே இரு கல் தொலைவிலும் உள்ளன. சமயத்தார்களில் சாம்பக்குளம் நல்லான் தாதனுக்குக் கிழக்கே இராமேசுவரம் வரையிலும், மேற்கே பார்த்திபனூர் வரையிலும், தெற்கே முதுகுளத்தார், கடுகுசந்தை வரையிலும், வடக்கே வைகை யாற்று வரையிலும் சமய ஆட்சி உண்டு. இவருடைய சமய ஆட்சி எல்லையில் 2700 சாட்டையும், 172 கொண்டியும், 270 தப்புக்காரரும் உட்படுவர். ஒரு சாட்டை என்பது ஒரு மாட்டைக் குறிக்கும். மாட்டுடன் நடந்துவரும் தாழ்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/100&oldid=1467962" இலிருந்து மீள்விக்கப்பட்டது