பக்கம்:அழகர் கோயில்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் இடையரும் 97 கள்ளர் வேடம் காரணமாக அழகருக்கும் கள்ளர் சாதியாருக் கும் ஏற்பட்ட நெருங்கிய உறவினை, பெரும்பாலும் வைணவப் பற்றுள்ள இடையர்களுக்கு ஏற்றுக்கொள்ள மளமில்லை. எனவே அழகர் கள்ளர் வேடம் போடுவதற்கான காரணத்தினைத் தங்கள் சாதியுடன் இணைப்பதற்கு அவர்கள் முயன்றிருக்கவேண்டும். அம் முயற்சியின் விளைவே மேற்குறித்த கதையாகலாம். வர்ணிப்புப் பாடுவதில் நாட்டமுடைய சாதியார் ஆகையால் வர்ணிப்புப் பாடலிலும் இக்கதை எளிதாகப் புகுந்துவிட்டது எனலாம். அழகர்கோயில் இறைவன் கால்நடை வளர்ப்போரின் தெய்வ மாகப் பன்னூறாண்டுகளாகப் போற்றப்பட்ட செய்தியை அறியலாம். அழகர்கோயிலுக்கு ஆண்டுதோறும் அடியவர்களால் நன்கொடை யாக வழங்கப்பெறும் மாடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரம் ஆகும்'8 எனக் கோயில் அலுவலகத்தார் தரும் செய்தியிலிருந்து அம்மரபு இன்றும் தொடர்ந்துவருவதை அறியலாம். குறிப்புகள் 1. களஆய்வில் 100 வினாவிடைப்பட்டி, நாள்: 9,10,11.5.79; பார்க்க: பிற்சேர்க்கை எண் IV : 1. 2. Dennis Hudson, Siva, Minaksi, Visnu-Reflections of a Popular Myth, South Indian Temples, p. 114. 3. கலித்தொகை, 104:4-6. 4. M.E.Manickavasagam Pillai, Culture of the Ancient Cheras, p. 37. 5. M. Srinivasa Iyengar. Tamil Studies, p. 71. 6. தொல். அகத்திணையியல், நூற்பா 5. 7. 'ஆயர் சிறுமியரோம்' திருப்பாவை, பாடல் 16, அடி 4 8. No.72 of S. I. I. Vol. XIV. 9. இரா. நாகசாமி (ப.ஆ.), தஞ்சைப்பெருவுடையார் கோயிற் கல்வெட்டுகள் (முதற்பகுதி), பக். 162,176, 177. 10. சிலம்பு, அடைக்கலக்காதை, அடிகள் 4-5. 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/104&oldid=1467966" இலிருந்து மீள்விக்கப்பட்டது