பக்கம்:அழகர் கோயில்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5.3. கோயிலும் பள்ளர்-பறையரும் தாழ்த்தப் 5.3.0. அழகர்கோயிலுக்கு வரும் அடியவர்களில் பட்ட இனத்தவர் ஒரு கணிசமான தொகையினராவர். தாழ்த்தப் பட்ட இனத்தவர் என இங்குக் குறிப்பது பள்ளர், பறையர் ஆகிய சாதிப்பெயர்களோடு உழவுத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களையே ஆகும். வேடமிட்டு வழிபடும் அடியவர்களில் இச்சாதிகளைச் சேர்த்தவர்கள் 28 விழுக்காட்டினராவர்.1 சமூக மாற்றங்களின் காரணமாக இவர்கள் சாதிப்பெயரைக் குறிப்பிடாது 'அரிசன்' என்றே தங்களைக் குறிப்பிடுவதால் களஆய்வில் இரு சாதியினரையும் துல்லிய மாகப் பிரித்தறிய முடியவில்லை. 5.3.1. சமயச்சார்பு : போலல்லாமல் கள்ளர்கள், வலையர்கள் ஆகியவர்களைப் இவ்வினத்தவர் நெற்றியில் வைணவச் சின்னமான திருமண்ணும், மார்பில் துளசி மாலையும் அணிந்து, பெரும்பாலும் முத்திரை பெற்றவராக, 'கோவிந்த' நாம முழக்கத்துடன் வருகின்றனர். இவர்கள் சாமியாடி வரும்போது. பெரும்பாலும் பெண்கள் உட்பட உற்றார் உறவினர் புடைசூழ வருகின்றனர். பிற இனத்தவர்கள் சாமியாடி வரும்போது பெரும்பாலும் பெண்கள் உடன்வருவதில்லை. அடியார்களின் தோற்றத்தையும் பிற நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளும்போது, இவர்கள் சமயச்சார்பு பெற்றவர்களாகவே தோன்றுகின்றனர். அழகர்கோயிலைப் போல, தென் தமிழ்நாட்டின் பிற வைணவத் திருப்பதிகளில் இவர்களின் ஈடுபாட்டைக் காணமுடிய வில்லை. எனவே தாழ்த்தப்பட்ட இனத்தவர்களாகிய இவர்கள், பெருந்தெய்வக் கோயில்களில் (Brahmanical deities) இக்கோயிலில் காட்டும் ஈடுபாடு ஆய்விற்குரியதாகும். 5.3.2. பள்ளர் சைவரா? வயல்களில் வேலை செய்யும் கடின உழைப்பாளிகளான பள்ளர்கள் தென்மாவட்டங்களிலேயே அதிகம் இருப்பதாக கஸ்டவ் ஆப்பர்ட் (Gustav Oppert) குறிப்பிடுகின்றார். 2 தர்ஸ்டனும். தஞ்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/107&oldid=1467972" இலிருந்து மீள்விக்கப்பட்டது