பக்கம்:அழகர் கோயில்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் பன்ளர் பறையரும் 5.3.5. அழகர்கோயிலும் பலராம வழிபாடும்: 103 திருமாலிருஞ்சோலையில் திருமாலும் பலராமனும் இணைந்து கொண்டிருப்பதாகப் பரிபாடற் பாட்டொன்று (15) கூறும். விஷ்ணு புராணத்தில் காணப்படும் கிருஷ்ணனின் இந்திர எதிர்ப்பும், தமிழ கத்தில் பலராம வழிபாட்டின் அறிமுகமும் மருதநிலத்து உழவரை இந்திர வழிபாட்டிலிருந்து கிருஷ்ண வழிபாட்டிற்கு இழுக்கும் முயற்சி, பரிபாடற் காலத்திலேயே தமிழகத்தில் தொடங்கிவிட்டது என்பதற்குச் சான்றுகளாகும். 17 திருமாலாகிய முழுமுதற் கடவுளின் நான்கு வியூகங்களில் சங்கர்ஷணன் (Sankarshana) அல்லது வெள்ளை எனப்படும் பலராமன் ஒரு வியூகமாகும். பலராம வழிபாடு நிகழ்ந்த வைணவத் தலமெனத் தமிழகத்தில் அழகர்கோயிலைத் தவிர வேறெ தனையும் குறிப்பிடச் சான்றுகளில்லை. மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபத்தில், கோவர்த்தனக காட்சியினைக் (கண்ணன் குன்று குடையாக எடுத்து ஆநிரை காத்தல்) காட்டும் சிற்பம் ஒன்றில் கிருஷ்ணன், பலராமன், நப்பின்னை ஆகியோரது உருவங்களைக் காணமுடிகிறது. இச்சிற்பம் கி.பி.எட்டாம் நூற்றாண்டினது எனச் சீனிவரசன் குறிப்பிடுகிறார். 16 எனவே திருமாலிருஞ்சோலையென்னும் அழகர்கோயிலே தமிழ்நாட்டில் பலராம வழிபாட்டின் மையமாகத் திகழ்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம். கலப்பையினை ஏந்திய பலராமனைக் காட்டி, இந்திர வழிபாட்டினரான உழவர்களைத் தன்பக்கம் இழுக்கும் முயற்சியைத் தமிழ்நாட்டு வைணவம் மேற் கொண்டிருக்கிறது. திருமாலிருஞ்சோலை குறித்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இத்தலத்தில் பலராம வழிபாடு நிகழ்ந்ததற்கான குறிப்புக்கள் இல்லை. எனவே ஆழ்வார்களின் காலத்திற்கு முன்வரே இத்தலத்தில் பலராம வழிபாடு கிருஷ்ண வழிபாட்டில் கலந்து மறைந்துவிட்டது எனக் கொள்ளவேண்டும். உழுதொழில் செய்வோர், இந்திர வழிபாட்டிலிருந்து பலராம வழிபாட்டிற்குத் திரும்பினராயின், இன்று பலராம வழிபாடு மறைத்து விட்ட நிலையில் அவர்கள் திருமால் வழிபாட்டினராகவே இருத்தல் வேண்டும். ஆனால் நடைமுறையில் பள்ளர் தங்களைத் தேவேந்திர குலத்தார் என அழைத்துக்கொண்டாலும் பெரும்பாலும் சிறுதெய்வ வழிபாட்டினராகவே உள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/110&oldid=1467975" இலிருந்து மீள்விக்கப்பட்டது